News Channel

பத்திரிகையாளர்கள் மற்றும் எழுத்தாளர்களுக்கான இப்தார் நிகழ்ச்சி


கும்பகோணம், மார்ச் 25, 2025:
ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் கும்பகோணம் கிளை சார்பாக நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் மற்றும் எழுத்தாளர்களுக்கான இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியை ஜனாப் ஹாஜா மாலிக் அவர்கள் வழிநடத்தினார். 

இந்நிகழ்ச்சியில் கும்பகோணம் கிளைத் தலைவர் ஜனாப் அப்துல் கலாம் ஆசாத் அவர்கள் தலைமை தாங்கினார். கும்பகோணம் மாநகர பத்திரிக்கையாளர்கள் சங்கத் தலைவர் வி. ராமச்சந்திரன் வாழ்த்துரை நிகழ்த்தினார். மேலும், திருச்சி அஸ்ஸலாம் காலேஜ் தாளாளர், திருச்சி ஜமாஅதே இஸ்லாமி ஹிந்த் கிளை தலைவர் மற்றும் ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் மாநிலச் செயலாளர் முனைவர் ஹஜ் மொய்தீன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.  

பத்திரிக்கையாளர் சங்கத் தலைவர் வி. ராமச்சந்திரன்:  
"முதல் முறையாக இப்தார் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சியும் பெருமையும் உள்ளது"

இதுகுறித்து அவர் கூறியதாவது:  
"பத்திரிக்கையாளர் சங்கம் ஆரம்பித்து முதல் முறையாக இப்தார் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறோம். இந்த மகிழ்ச்சியான நிகழ்வில் பங்கேற்பதில் எங்களுக்கு மிக்க சந்தோஷமும் பெருமையும் உள்ளது. சமூக ஒற்றுமை மற்றும் இனநல்லிணக்கத்தை வலியுறுத்தும் இத்தகைய நிகழ்ச்சிகள் மேலும் வளர வேண்டும்" என்று தெரிவித்தார்.  

வி. ராமச்சந்திரன் அவர்களின் இந்தப் பேச்சு, பல்வேறு சமூகப் பிரிவினரிடையே நட்புறவை ஊக்குவிக்கும் வகையில் அமைந்தது.

நிகழ்ச்சியின் இறுதியில், சகோதரர் முகமது ரியாஸ் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.  

நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வு, சமூக ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தியதாக அமைந்தது.