News Channel

கோவைக்கு வருகை தந்த தமிழ்நாடு சிறுபான்மை நலத்துறை அமைச்சர் மதிப்பிற்குரிய செஞ்சி மஸ்தான் அவர்களோடு கோவை ஜமாஅத் செயலாளர் சந்திப்பு.

இச்சந்திப்பில் சிறுபான்மையினர் நலத்துறை சார்பாக பல்வேறு வகையான நலத்திட்டங்களை வழங்கியமைக்கு பாராட்டு தெரிவித்த அப்துல் ஹக்கீம் அவர்கள், கோவை கரும்புக்கடைப் பகுதியின் நீண்ட நாள் கோரிக்கையான புதிய அரசு மேல்நிலைப் பள்ளி, தொடக்கநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்துதல், அனைத்து வசதிகளுடன் கூடிய வங்கி, நூலகம் மற்றும் மாணவர்கள் விளையாடிட மைதானம் ஆகிய வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு மனுவையும் வழங்கினார்.
மனுவைப் பெற்றுக் கொண்ட அமைச்சர் அவர்கள் கரும்புக்கடைப் பகுதியில் உடனடியாக நலத்திட்ட உதவிகளை ஆரம்பிக்க ஆவணம் செய்வதாக தெரிவித்தார்.
இச்சந்திப்பில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. கிராந்தி குமார் பாடி அவர்கள் உடனிருந்தார்.
#Coimbatore #MinoritiesWelfare #JIH #Karumbukkadai