8 மார்ச் 2025
பத்திரிகை செய்தி
பெண்களுக்கு எதிரான ஆபத்தான மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை:
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் (JIH) தேசிய செயலாளர் ரஹ்மத்துன்னிஸா
புதுதில்லி: சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவது குறித்து ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் (JIH) தேசிய செயலாளர் திருமதி ரஹ்மத்துன்னிஸா தீவிர கவலையை வெளியிட்டுள்ளார்.
JIH தலைமையகத்தில் நடைபெற்ற மாதாந்திர பத்திரிகை சந்திப்பில் அவர் பேசுகையில், “தேசிய குற்ற பதிவு கழகம்" (NCRB) யின் தற்போதைய அறிக்கையின் படி, 2022 ஆம் ஆண்டில் 1,00,000 பெண்களில் 51 பெண்கள் குற்றச்செயல்களினால் பலியாகியுள்ளனர். ஒவ்வொரு 16 நிமிடத்திற்கும் ஒரு பெண்குறித்துக் குற்றம் பதிவு செய்யப்படுகிறது. இது மிகவும் ஆபத்தானதும் சகிக்க முடியாததுமாகும். கொலை மற்றும் கூட்டுப்பாலியல் வன்முறைகளில் 69.4% தண்டனை விகிதம் காணப்படுகின்ற போதிலும், சாதாரண பாலியல் வன்முறைகளில் இது 27.4% ஆக குறைந்து நிற்கிறது. இதன் மூலம் நமது நீதித்துறை அமைப்பின் கடுமையான தோல்வியை வெளிப்படுத்துகிறது, மேலும் குற்றவாளிகளை தண்டனையிலிருந்து விலக சாத்தியமுள்ள சூழலை ஏற்படுத்துகிறது.
கொல்கத்தாவில் ஒரு மருத்துவர் பாலியல் வன்முறைக்குட்பட்டு கொல்லப்பட்ட சம்பவம், புனேயில் ஒரு பெண் பேருந்தில் பாலியல் வன்முறைக்கு உள்ளான சம்பவம் ஆகியவை நாட்டில் பெண்களின் பாதுகாப்பின்மைப் பற்றிய எச்சரிக்கையை உணர்த்துகின்றது. மத்திய அமைச்சர் ரக்ஷா காட்சே அவர்களின் மகளும் தொல்லைக்கு உள்ளாகியுள்ள சம்பவம், சாதாரண மகளிர் மட்டுமின்றி பிரபலர்களும் பாதுகாப்பற்ற நிலையிலிருப்பதை காட்டுகிறது.”
சமூகத்தில் நிலவும் ஒழுக்கமின்மை பற்றிப் பேசும்போது, திருமதி ரஹ்மத்துன்னிஸா கூறினார்: “பல்லாயிரக்கணக்கான புகாரளிக்கப்படாத ஈவு-டீஸிஙும் பாலியல் தொல்லைகளும் சமூகத்தின் ஆழ்ந்த ஒழுக்கச் சீர்கேட்டை வெளிப்படுத்துகின்றது.
பெண்களின் உண்மையான முன்னேற்றம் என்பது அவர்களின் பாதுகாப்பு, மரியாதை மற்றும் உரிமை நிலை பெறுவதில் தான் இருக்கிறது. சட்டங்களை சரியாக செயல்படுத்துவதுடன் சமூக மாற்றமும் அவசியம். *நபி முகம்மது (ஸல்)* கூறினார்கள்: "நல்ல ஒழுக்கமுடையவரே உங்களில் சிறந்தவராவார்". அரசாங்கம், கல்வி நிறுவனங்கள், குடிமக்கள் ஆகியோர் அனைவரும் இளம் பருவத்திலிருந்தே பெண்களுக்காக மரியாதையை வளர்க்க வேண்டுமெனவும், பெண்களுக்கு உரிய மரியாதை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் வலியுறுத்துகிறது.”
JIH துணைத் தலைவர் பேராசிரியர் சலீம் இன்ஜினியர் அவர்கள், 2024 ஆம் ஆண்டு வக்ஃப் திருத்தச் சட்ட மசோதா தொடர்பாக பாராளுமன்ற கூட்டுக்குழுவின் (JPC) சார்பாக கருத்துக்களை பெறும் முறையில் பாதநிலை நடந்ததாக தனது வேதனையை வெளிப்படுத்தினார். “பொதுமக்கள் பெரும் அளவில் எதிர்ப்புத் தெரிவித்திருந்த போதிலும், குறிக்கோள் மாறாக இந்த மசோதா கட்டாயமாக கொண்டு வரப்பட்டது. இந்த சட்டம், 1995 வாக்ஃப் சட்டத்தில் பெரும் மாற்றங்களை கொண்டுவந்து, வாக்ஃப் சொத்துக்களில் அரசாங்கத்தின் தலையிடல் அதிகமாக்குகிறது. ஆனால், நாம் இதை தெளிவுபடுத்த விரும்புகிறோம், என்னவென்றால் வாக்ஃப் சொத்துக்கள் அரசின் சொத்துக்கள் அல்ல, அது இஸ்லாமிய அமானிதங்கள் ஆகும். வக்ஃப் நிர்வாகத்தை குறைப்பதற்கும் அரசு கட்டுப்பாட்டை அதிகரிப்பதற்குமான எந்த முயற்சியும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த சட்டத்தை அரசு திரும்பப் பெற வேண்டும். மாறாக, வாக்ஃப் சட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி, முஸ்லிம் பாரம்பரியத்தையும் நிறுவனங்களையும் பாதுகாப்பதை உறுதி செய்ய வேண்டும். தங்களை மதசார்பின்மையராக கூறிக்கொள்ளும் கட்சிகள் வக்ஃப் திருத்த மசோதாவிற்கு பாராளுமன்றத்தில் ஆதரவு அளித்ததை நாங்கள் வருந்துகிறோம். இந்த சட்டத்திற்கான எதிர்ப்பில் AIMPLB (அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம்) மற்றும் பிற முஸ்லிம் அமைப்புகளுடன் இணைந்து நாங்கள் அனைவரும் சட்டபூர்வமான, ஜனநாயகமான , அமைதியான வழிகளில் போராடுவதை தொடருவோம். மார்ச் 13 ஆம் தேதி ஜந்தர் மந்தரில் AIMPLB ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்டத்தில் எல்லா நீதியின்பால் பற்றுள்ள அனைத்து குடிமக்களும் கலந்து கொண்டு அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.”
இந்தியாவில் பொருளாதார சமத்துவமின்மை அதிகரிப்பு பற்றிப் பேசும் போது, பேராசிரியர் சலீம் இன்ஜினியர் அவர்கள், “Indus Valley ஆண்டு அறிக்கை 2025” குறிப்பிடுகையில், இந்த அறிக்கை உயர்தர 10% மக்கள் செல்வத்தை சேர்த்துக் கொண்டே இருக்கின்றனர் கீழ்த்தர 50% சதவீத மக்கள் உயிர் வாழ போராடுகின்றனர் என்பதை குறிப்பிடுகிறது. பொருளாதார சீரமைப்புகளுக்குப் பிறகும், செல்வம் முதலாளிகள் மற்றும் உயர்தர வர்க்கத்தினரிடம் அதிகரித்து தாழ்த்தப்பட்ட மக்களை இன்னும் பின்னுக்குத் தள்ளுகிறது. அரசாங்கம் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய நியாயமான வரி முறை, சமூக நல திட்டங்கள், மற்றும் அரசியல் மறுசீரமைப்புகள் போன்றவை முக்கியமாக அமல்படுத்த வேண்டும்” எனக் குறிப்பிட்டார்.
மத சிறுபான்மையினருக்கு எதிராக அதிகரித்து வரும் சமூக நிகழ்வுகள், வெறுப்பு குற்றங்கள் பற்றி பேசும்போது, "பேராசிரியர் சலீம் இன்ஜினியர் கூறினார், “மத சிறுபான்மையினருக்கு எதிராக அதிகரித்து வரும் வெறுப்பு குற்றங்களையும், சமூக வெறியையும் நாம் கடுமையாக கண்டிக்கிறோம். மத்திய பிரதேசத்தில் இரண்டு முஸ்லிம் ஆண்கள் காவல் நிலையத்தில் சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம், ராஜஸ்தானில் போலீசாரின் ரேய்டின் போது ஒரு குழந்தை உயிரிழந்த சம்பவம், மகாராஷ்டிராவின் சிகாலி-குடல்வாடி பகுதியில் முஸ்லிம்களின் கடைகள் இடிக்கப்பட்ட சம்பவம் ஆகியவை இஸ்லாமியர்களின் உரிமைகள் மீதான அடக்குமுறையை வெளிப்படுத்துகின்றது. பகுப்பாய்வு அரசியல் நோக்கங்களை முன்னேற்ற, முஸ்லிம்கள் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டு குற்றம் சுமத்தப்படுகின்றனர். அரசாங்கம், காவல் துறை மற்றும் நீதித்துறை சட்டப்பூர்வ உரிமைகளை காப்பாற்ற, நியாயத்தை உறுதி செய்ய உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். இந்திய மக்கள் சமூக வெறிப்புணர்ச்சி மற்றும் ஃபாசிசத்தை எதிர்க்க வேண்டும். "வேற்றுமையில் ஒற்றுமை" என்பதே தேசத்தின் வலிமை என்று உணர்த்தி நீதி மிக்க சமூகத்தை உருவாக்க ஜனநாயகத்தையும் அரசியல் சட்ட மதிப்புகளையும் மீட்டெடுக்க அனைத்து குடியினரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
வெளியீடு:
சல்மான் அஹ்மத்
தேசிய உதவி செயலாளர்,
ஊடகத் துறை
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்
தலைமையகம்
புதுதில்லி