அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
இறைவனின் பேரருளால் 16.02.2025 அன்று
மணப்பாறை
தக்வா மஸ்ஜித் சென்டரில் ரமளானே வருக நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் திருச்சி மண்டல பொறுப்பாளர் ஜனாப் சையது முகமது மதுரை கிளையின் பொறுப்பாளர் முகமது அப்பாஸ் கிளையின் தலைவர் ஜபருல்லாஹ் மணப்பாறை ஜமாத் தலைவர் முகமது அனிபா மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.
மணப்பாறை பகுதியை சேர்ந்த சுமார் நூற்றுக்கு மேற்பட்டோர் விழாவில் கலந்து கொண்டனர்.
ஒற்றுமைக்கும் ஒருங்கிணைப்பிற்கும் ரமளான் காட்டும் வழிகாட்டுதலும் படிப்பினைகளும் என்னும் தலைப்பில் ஜனாப் செய்யது முகமது அவர்கள் துவக்க உரையாற்றினார்கள். ரமளான் மாதத்தின் சிறப்பு குறித்தும் அந்த மாதத்தில் நாம் தயாரிப்புக்காக மேற்கொள்ள வேண்டிய பயிற்சிகள் குறித்தும் அதை வாழ்வியல் முறையாக கடைபிடிப்பதற்கான வழிகளையும் கூறினார்.
ரமலான் மாதம் ஒற்றுமைக்காகவும் ஒருங்கிணைப்பிற்காகவும் நமக்கு தரும் வழிகாட்டுதல்களையும் படிப்பினைகளையும் மற்றும் நோக்கங்கள் குறித்தும் எடுத்துரைத்தார்.
நிகழ்ச்சியின் சிறப்புரையாற்றிய மதுரை மன்ற பொறுப்பாளர் ஜனா முகமது அப்பாஸ் அவர்கள் இஸ்லாத்தின் கடமைகளையும் அந்த முக்கியமான கடமைகள் குறித்து குர்ஆன் விவரிப்பதையும் குர்ஆனின் மூலமாக நாம் பெற வேண்டிய படிப்பினைகளையும் தனது சிறப்புரையின் வாயிலாக விளக்கினார்.
நிகழ்ச்சியின் இறுதி பகுதியாக மணப்பாறை கிளையின் தலைவர் ஜபருல்லா அவர்கள் நன்றியுரை ஆற்றினார் விழா இனிதே சுமார் 8.00 மணி அளவில்
நிறைவுற்றது.