ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கிருஷ்ணகிரி கிளையின் சார்பாக CIO ஒலிம்பிக் 9/2/2025 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் 1 மணி வரை கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டுத் திடல் (Stadium) CIO ஒலிம்பிக் மாணவ மாணவியர்களுக்கு விளையாட்டு போட்டிகள் மிக சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில்
50 M running,
100M running,
Water filling,
Potato gathering race, Matching colour,
Lemon and spoon,
Bursting balloon
ஆகிய போட்டிகள் நடைபெற்றது.
நகர தலைவர் ஜனாப் சிபகத்துல்லாஹ் தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினர்களாக CIOவின் மாநில செயலாளர் உருது பிரிவு ஜனாப் அஹமத் அன்சர் அவர்கள் குழந்தைகளை இளம் பருவத்திலேயே இஸ்லாமிய அச்சில் வார்த்தெடுக்கவும் அதற்கான சூழல் உருவாக்கி தருவது நம் கடமையும் பற்றி சிறப்புரை ஆற்றினார்.
கிருஷ்ணகிரி அஹலே சுன்னத் ஜமாத் டவுன் கமிட்டி தலைவர் ஜனாப் இர்ஃபானுல்லாஹ் ஹுசைனி
தொழிலதிபர் ஜனாப் நவாஸ் பாஷா,
நூர் மஸ்ஜித் தலைவர் ஜனாப் குப்தார் அஹமத்,
ஷாஹி மஸ்ஜித் துணைத் தலைவர் ஜனாப் பாரூக் அஹ்மத்,
இஸ்லாமிய பைத்துல்மால் தலைவர் வழக்கறிஞர் ஜனாப் லியாகத் அலிகான்
சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவித்தனர்.
மேலும் இந்த நிகழ்வில் 130 மேற்பட்ட மாணவ மாணவிகள் போட்டியில் பங்கு பெற்றனர்.
மேலும் 100 மேற்பட்ட பெற்றோர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்த நிகழ்ச்சியை JIH உறுப்பினர்கள், ஊழியர்கள், மகளிர் அணியினர் ஆகியோர் மிக சிறப்பாக ஏற்பாடுகள் செய்து நடத்தி நிறைவு செய்தனர்.
எல்லா புகழும் இறைவனுக்கே