News Channel

பத்திரிக்கை அறிக்கை


பத்திரிக்கை செய்தி:

7 பிப்ரவரி


அனைத்து முஸ்லீம் அமைப்புகளும் வக்ஃப் நிலத்தை அரசு கையகப்படுத்துவதற்கான முயற்சிகளை அனைத்து சட்ட வழிமுறைகளையும் மேற்கொண்டு  எதிர்ப்பார்கள்: பேராசிரியர் சலீம் பொறியாளர்

புதுடெல்லி: 
ஜமாத்தே இஸ்லாமி ஹிந்தின் (JIH) துணைத் தலைவர் பேராசிரியர் சலீம் பொறியாளர், வக்ஃப் சொத்துக்கள் மீது
 JPC ( Joint Parliamentary Committee - நாடாளுமன்ற கூட்டுக் குழு) நடவடிக்கை எடுப்பதற்கு  கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். 

மேலும் 
வக்ஃப் திருத்த மசோதா 2024 மூலம் வக்ஃப் நிலங்களைகளை அரசு கையகப்படுத்துவதற்கான  முயற்சிகளை  தடுப்பதற்கான அனைத்து சட்ட வழிமுறைகளையும் முஸ்லீம் அமைப்புகள் மேற்கொள்வார்கள் என்று தெரிவித்தார்.

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தலைமையகத்தில் நடந்த மாதாந்திர பத்திரிகையாளர் சந்திப்பில், 
ஊடகங்களுக்கு விளக்கமளித்த, பேராசிரியர் சலீம் பொறியாளர் அவர்கள் 
முஸ்லிம்களின் மத மற்றும் அரசியலமைப்பு உரிமைகளை அச்சுறுத்தும் வக்ஃப் திருத்த மசோதா 2024 ஐ நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்
ஒரு பக்கச்சார்புடைய கூட்டு நாடாளுமன்றக் குழு (JPC)   எதிர்க்கட்சிகளின் ஆட்சேபணைக்குரல்களை புறக்கணித்தும், லட்சக்கணக்கான  குடிமக்களிடமிருந்து பெற்ற ஆட்சேபனைகளையும் மதிக்கவில்லை. 

இத்தனை எதிர்ப்புகளுக்கிடையில்
இந்த மசோதாவை நிறைவேற்ற இந்த ஆலோசனை நடவடிக்கை அர்த்தமற்றதும்  
மக்களை ஏமாற்றுவதுமாகும். சீர்திருத்தம் என்ற பெயரில் வக்ஃப் சொத்துக்களை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கான முயற்சியாகும். வக்ஃபாக உபயோகப்படுத்தப்படுவது (Waqf by user) என்ற நிலைப்பாட்டை நீக்குவது நீண்டகால உபயோகித்தில் இருக்கும் பள்ளிவாசல்கள், தர்காக்கள் போன்ற மத சம்பந்தமான இடங்கள் குறித்து தேவையில்லாத வழக்குகளும், மாநில ஒதுக்கீட்டிற்கு மாறும் சாத்தியக்கூறுகளும் ஏற்படும். 

இந்த மசோதா வக்ஃபின் வரையறையை சீர்குலைக்கும், அதன் பாதுகாவலர்களின் நிர்வாகத்தை மாற்றும் மேலும் வக்ஃப் வாரியத்தின் சுதந்திரத்தை குறைக்கும். 

இது மத சிறுபான்மையினர் தங்கள் நிறுவனங்களை நிர்வகிக்கும் உரிமையை பாதுகாக்கும் அரசியலமைப்பு சட்டம் 26 வது பிரிவை மீறுகிறது. 

வக்ஃப் சொத்துக்கள் அரசு சொத்துக்கள் அல்ல, 
அது 
மதரீதியான அறக்கொடை.
வக்ஃப் வாரியங்களும், அறங்காவலர்களும் அதன் பாதுகாவலர்கள், 
அதில் ஏதேனும் நேரடி அரசு கட்டுப்பாட்டு நுழைந்தால் அரசியலமைப்பு சட்டம் வழங்கும் மத உரிமையை பாதிக்கக்கூடியதாக இருக்கும்.   

அரசியலமைப்பு சட்டத்தின் விதிகள் 25,26,29 மற்றும் 14-விதிகளை மீறும்
இந்த மசோதாவை,  
எதிர்க்கும்படி மதசார்பற்ற அனைத்து கட்சிகளையும்,
 NDA-ன் கூட்டணிக்கட்சிகளையும் மற்றும் எதிர்கட்சிகளையும், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கேட்டுக்கொள்கிறது. 

மேலும் இந்த மசோதாவை திரும்பப் பெறுமாறு 
மத்திய அரசை 
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் வலியுறுத்துகிறது. 
அதற்கு பதிலாக ஏற்கனவே இருக்கும் வக்ஃப் சட்ட விதிகளை சரிவர பேணும்படி கேட்டுக் கொள்கிறது. 

துரதிர்ஷ்டவசமாக இந்த மசோதாவை ஜனநாயக விரோதமான முறையில் அரசாங்கம் நிறைவேற்றினால்
அதை எதிர்க்க கூடிய 
அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியத்தை (AIMPLB), மற்ற முஸ்லீம் அமைப்புகளுடன் ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் ஒத்துழைக்கும். 

மேலும் அனைத்து சட்ட வழிமுறைகள் மற்றும் அரசியலமைப்பு வழிமுறைகளில் முஸ்லீம் சமூகத்தின்  உரிமைகளைப் பெறுவதற்கும் அவர்களின் வக்ஃப் நிறுவனங்கள் மற்றும் சொத்துக்களைப் பாதுகாக்கும். 

"மகா கும்பமேளா"

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் தேசிய செயலாளர் 
சையத் தன்வீர் அஹ்மத் 
கும்பமேளா கூட்ட நெரிசல் விபத்தைப் பற்றி விளக்கமாக எடுத்துரைத்தார்.
"பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா நிகழ்ச்சியில் ஏற்பட்ட துக்ககரமான கூட்ட நெரிசல், விபத்தில் பல அப்பாவி  பக்தர்கள் பலியானது குறித்து ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மிகுந்த வருத்தமடைகிறது. 

துக்ககரமான இந்த தருணத்தில் துயரமடைந்த குடும்பங்களுக்கு எங்கள் மனமார்ந்த இரங்கலை தெரிவிக்கிறோம். 

துரதிர்ஷ்டவசமான இதுபோன்ற சம்பவம் பரந்த கூட்டங்களில் துல்லியமான திட்டமிடல் மற்றும் கூட்ட நிர்வாகத்தின் அவசர தேவையை மீண்டும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. 

யாத்ரீகர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கு அதிக முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும். பொதுவாக பக்தர்களுக்கான தடையற்ற ஏற்பாடுகள் உறுதி செய்யப்பட வேண்டும், 
மேலும் சிறப்பு சேவைகள் மற்றும்  முக்கிய பிரமுகர்களுக்கான தேவைகள் ஆகியவற்றில்  பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிப்பதற்கான அடிப்படை பொறுப்பை நிர்வாகம் புறக்கணிக்கக்கூடாது. 

மத்திய அரசும் உத்தரபிரதேச மாநில அரசும் இதற்கு பொறுப்பேற்று, 
உடனடியாக  ஏற்பாடுகளில் 
உள்ள குறைபாடுகளை களைய வேண்டும். 
முக்கிய பிரமுகர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் போலவே பாமர யாத்ரீகர்களின் உயிர்களும்  கவனிப்பிற்கும் பாதுகாப்பிற்கும்
தகுதியானது. 

அரசாங்கத்தையும் நிர்வாகத்தையும்  விமர்சித்தும் மகா கும்பமேளா ஏற்பாடுகளில் உள்ள குறைபாடுகளை முன்னிலைப்படுத்தியும் எந்தவொரு அறிக்கையையும்  ஊடகங்கள் வெளியிட தேவையற்ற முறையில் அனுமதிக்காததையும் அறிகிறோம். 

இந்த அதிகப் பிரசங்கித்தனமான அணுகுமுறை, 
ஊடகங்கள் அங்கு நடந்த நிகழ்வுகளை நிர்வகிப்பதில் உள்ள குறைபாடுகளை விமர்சன ரீதியாக பகுப்பாய்வு செய்வதைத் தடுத்தன, 
இல்லையெனில் அந்த குறைபாடுகளை சரியான நேரத்தில் அகற்ற அரசாங்கத்திற்கும் நிர்வாகத்திற்கும் முன்னெச்சரிக்கை கிடைத்து  தயார்நிலை மற்றும் பயனுள்ள நெருக்கடி நிர்வாகத்தை உறுதி செய்ய உதவியாக இருந்திருக்கும். 

எதிர்காலத்தில் இத்தகைய துயரங்களைத் தடுக்க, 
சரியான நடவடிக்கைகளை எடுக்க  ஊடகங்கள் தனது வேலையைச் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று நாங்கள் அதிகாரிகளை கேட்டுக்கொள்கிறோம். 
பல்வேறு தனிநபர்கள், குறிப்பாக முஸ்லிம் சமூகம் ஆயிரக்கணக்கான மஹா கும்பமேளா யாத்ரீகர்களின் உயிர்களைக் காப்பாற்றுவதற்கும் பல்வேறு உதவிகள் வழங்குவதற்கும் அசாதாரண முயற்சிகளை மேற்கொண்டதற்கு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் பாராட்டுகிறது. 

பல மஹா கும்பமேளா யாத்ரீகர்களுக்கு மசூதிகளில் தங்க தஞ்சமளித்தது,  அவர்களுக்கு உணவு, போர்வைகள் மற்றும் பிற அத்தியாவசிய தேவைகளை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ‎ 
அவர்களின் செயல்களிலிருந்து, வகுப்புவாத நல்லிணக்கம், சகோதரத்துவம்மற்றும் ஒற்றுமையை நிலைநிறுத்துவதில் நமது தலைவர்களும் முழு தேசமும்  உத்வேகம் பெற வேண்டும்.

"மத்திய பட்ஜெட்"

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் துணைத் தலைவர், பேராசிரியர் சலீம் பொறியாளர் அவர்கள் மத்திய பட்ஜெட் 2025-26-ன் சுருக்கமான பகுப்பாய்வில்,
 "மத்திய பட்ஜெட்டில் 2025-26 இல் வருமான வரி குறைப்புகள், போன்ற பல நல்ல அம்சங்களை நாங்கள் பாராட்டுகிறோம், தள்ளுபடி வரம்பை ரூ .12 லட்சமாக உயர்த்தியது மற்றும் நடுத்தர வர்க்கத்திற்கு பயனளிக்கும் வகையில் வருமான வரி விகிதங்களை சீராக்கியது, 
வரி செலுத்துவோரின் கைகளில் செலவழிக்க வருமானத்தை  விட்டு வைப்பதால் வளர்ச்சிக்கு காரணமாக இருக்கும். 

மற்ற நல்ல விஷயங்கள் என்னவென்றால், ரூ .1 லட்சம் கோடி வருவாய் இழப்பு இருந்தபோதிலும், நிதி பற்றாக்குறையை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.4% ஆக வைத்திருப்பது. 

இது நமது கடன் வாங்குதலை கட்டுபடுத்துவதை உறுதிசெய்யும். 
வணிக விதிமுறைகளை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு உயர் மட்டக் குழு, ஒழுங்குமுறை சீர்திருத்தங்களுக்கான ஒரு உந்துதலாக இருக்கும், முதலீடு மற்றும் வர்த்தகத்திற்கு உதவும். இருப்பினும், இந்த பட்ஜெட் பல்வேறு விஷயங்களில் எங்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது. 

கடுமையான வாழ்வாதார நெருக்கடியின் அடிப்படையில், அதிக அளவில் இளைஞர்களின் வேலையின்மை, மூலதனம் மற்றும் விவசாய  வளர்ச்சிக்கு
குறைந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி, நீதியான மறுபகிர்வுக்கு முன்னுரிமை அளிக்க பட்ஜெட்டில் தீவிர கொள்கை மாற்றங்களை மேற்கொள்ளவும் 
சமமான வளர்ச்சி,  சமத்துவமின்மை, வேலையின்மை மற்றும் புறக்கணித்தல் ஆகியவற்றை நிவர்த்தி செய்வதற்கான திறமையான நிர்வாகத்திற்கு முன்னுரிமை அளிக்கவும்
நிதி மந்திரிக்கு ஒரு நல்ல வாய்ப்பாக இருந்தது. 

ஒரு விநியோக முறை  உத்தியிலிருந்து, வணிக வளர்ச்சி மற்றும் வரி சலுகைகளில் கவனம் செலுத்த, 
குடிமக்களின் வாங்கும் சக்தியை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்ட, நுகர்வு தூண்டுதல் மற்றும் நல திட்டங்களை மேம்படுத்த, 
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், பட்ஜெட் முன் பரிந்துரைகளை நிதி மந்திரியிடம் சமர்ப்பித்திருந்தது. துரதிர்ஷ்டவசமாக பட்ஜெட் 2025-26- நோக்கும்போது  எங்களது பரிந்துரைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன என்பதை அறியமுடிந்தது. 

இந்த பட்ஜெட்  பல்வேறு வாய்ப்புகளை தவறவிட்டுள்ளது. 
மத்திய பட்ஜெட் 2025-26 விரிவாக்கப்படக்கூடியதாக இருக்க வேண்டியதாகும். 

ஆனால் அதற்கு பதிலாக மொத்த செலவினங்கள் கிட்டத்தட்ட ஒரு லட்சம் கோடியாக குறைக்கப்பட்டுள்ளன.  
இது சமூக செலவினங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும், மேலும் ஏழைகளின் அவல நிலையை மேலும் அதிகரிக்கும். MGNREGA நிதி ஒதுக்கீடு குறைப்பை  மாற்றியமைத்தல், நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தை அறிமுகப்படுத்துதல், சுகாதார செலவினங்களை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4% ஆக அதிகரித்தல் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் ஒதுக்கீட்டில் 6% உடன் ஒரு விரிவான கல்விப் பணியைத் தொடங்க நாங்கள் கோரியிருந்தோம். 
இவை அனைத்தும் கவனிக்கப்படவில்லை. 

மேலும் சிறுபான்மை மேம்பாடு,  SC/ST- அதிகாரமளித்தல் அல்லது விவசாய கடன் நிவாரணம் போன்றவற்றை பட்ஜெட்டில் வெளிப்படையாக தெரிவிக்கப்படவில்லை. 
சமூக நீதி மற்றும் சமமான வளர்ச்சியின் முக்கிய பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. 
வருவாய் முன்னணியில், அத்தியாவசிய பொருட்களில் GSTயை 5%-ல் நிலைநிறுத்தவும், ஆடம்பர வரியை அறிமுகப்படுத்தவும், பெரிய நிறுவனங்களுக்கு அதிகப்படியான வரியை விதிக்கவும், மத்திய வரிகளில் மாநிலங்களின் பங்கை 50%ஆகவும் அதிகரிக்கவும் கோரியிருந்தோம். 
ஆனால் இது மாதிரியான முக்கிய விஷயத்தில் பட்ஜெட் மவுனமாக உள்ளது. 
இவைகளை பாதிக்கும் காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை. பொதுவான குடிமகனுக்கு முன்னுரிமை அளிக்கும் மற்றும் சமமான வளர்ச்சியை ஆதரிக்கும் முற்போக்கான வருவாய் கொள்கையை அரசாங்கம் பின்பற்ற வேண்டும் என்று நாங்கள் உறுதியாக எதிர்ப்பார்க்கிறோம். 
2025-26 பட்ஜெட்டில் இருந்து அறியவருவது, செலவினங்களின் பெரும் பங்கு (20%) கடனுக்கான வட்டியாக செல்கிறது. 
இது மக்களின் நலனுக்காக நாம் பயன்படுத்தக்கூடிய  உற்பத்தி அல்லாத செலவினங்களில் ஒரு முக்கிய பகுதியாகும். கடன் பொறிக்குள் சிக்குவதைத் தவிர்க்க, பங்கு அடிப்படையிலான நிதி மாதிரி மற்றும் வட்டி இல்லாத பொருளாதாரத்தை நோக்கி நாம் தைரியமான நகர்வை மேற்கொள்ள வேண்டும். வழக்கமான வங்கிகளுக்குள் ஈக்விட்டி அடிப்படையிலான, வட்டி இல்லாத வங்கி  சாளரத்தை நாம் இணைத்துக்கொள்வது ஒரு தொடக்கமாக இருக்கும். இது எங்கள் புறத்திலிருந்து நிதி அமைச்சகத்திற்கும் பரிந்துரைக்கப்பட்டது. 
இது ஒரு புதுமையான அணுகுமுறையாக இருக்கும், மேலும் கடன் தொடர்பான சவால்களுக்காக சோதிக்கப்பட்ட தீர்வுகளைத் தேடுவதிலிருந்து நமது அரசியல் கருத்துக்கள் நம்மைத் தடுக்கக்கூடாது. அரசாங்கம் பாகுபாடான மற்றும் வாக்களிக்கும் வங்கி அரசியலுக்கு மேலே உயரும் என்று நாங்கள் நம்புகிறோம்,
மேலும் நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் பயனளிக்கும் பொருளாதாரக் கொள்கையில் உண்மையான மாற்றத்திற்கான ஒரு கருவியாக பட்ஜெட்டை வைத்திருப்போம். 

வெளியீடு:    
சல்மான் அஹ்மத் 
தேசிய உதவி செயலாளர்
ஊடகத் துறை, 
ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் தலைமையகம். 
புதுடெல்லி