உடுமலை கிளை ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பில் மிலாது நபி சிறப்பு நிகழ்ச்சி.
14.10.2023 உடுமலை கிளை ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பில் மிலாதுநபி சிறப்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது.
கோழி மடம் இமாம் திருக்குர்ஆன் ஓதி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
ஜாமியா பள்ளிவாசல் தலைவர்முஹம்மது அப்துல்லாஹ் அன்வாரி வாழ்த்துரை வழங்கினார்.
அனைவருக்கும் ஆனவர் அண்ணல் நபிகளார் என்ற தலைப்பில் *சமரசம் மாத இதழின் ஆசிரியர் வி.எஸ் முகமது அவர்கள் முஹம்மத் நபி(ஸல்) அவர்களின் வாழ்வியல் உலகின் அனைத்து மக்களும் பின்பற்றக்கூடிய இறைத்தூதரான மாமனிதர் என்று வரலாற்று ஒளியில் சிறப்புரையாற்றினார்.
உடுமலை பாரதியார் நூற்றாண்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளி நல்லாசிரியர் விஜயலட்சுமி, வித்யாசாகர் கல்லூரி தமிழ் துறை உதவி பேராசிரியர் முனைவர் காமராஜ். கொங்கு மண்டல ஆய்வாளர் ரவி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு மற்றும் சாலிடாரி
ட்டி இளைஞர் அமைப்பினர் , மகளிரணி செய்திருந்தனர்.
பெண்மையை போற்றும் இஸ்லாம், மரம் நடுதலின் அவசியம் கோபம், கோபத்தால் விளையும் தீமைகள், பெண் குழந்தை நற்செய்தி, தாய் மற்றும் அண்ணல் நபிகள் குறித்த பிற மத அறிஞர்களின் அறிவுரைகள் போன்றவற்றை கண்காட்சி செயல்முறைகள் மூலம் மாணவர்கள் காட்சிப்படுத்தியிருந்தனர்.
நிறைவாக மகளிர் அணி தலைவி மெகராஜ் நன்றியுரை கூறினார்.
அல்ஹம்துலில்லாஹ்!
35 சகோதர சமயத்தவரும் 110 முஸ்லிம் மக்களும் VIP நபர்களும் கலந்து கொண்டனர்.