News Channel

ஒழுக்கமே சுதந்திரம் பரப்புரையின் முத்தாய்ப்பாக கோவையில் நடைபெற்ற மாபெரும் மகளிர் மாநாடு, மகளிர் திரளில் வெற்றி மாநாடாகியது.

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர் அணி, அகில இந்திய அளவில் நடத்திய 'ஒழுக்கமே சுதந்திரம்' பரப்புரையின் முத்தாய்ப்பாக கோவையில் மகளிர் மாநாடு இன்று ( அக்டோபர் 8 ) கோவை போத்தனூர் PVG மஹாலில் வைத்து நடைபெற்றது.

நிகழ்வின் ஆரம்பமே 'வேலி தாண்டும் வெள்ளாடுகள்' என்ற தலைப்பில் சிந்தனையைத் தூண்டும் மேடை நாடகத்தினை மகளிர் அணியினர் அரங்கேற்றினர்.

தொடர்ந்து ஹிதாயா மாணவிகள் இறைவசனங்கள் ஓதி மாநாட்டினை தொடங்கி வைத்தனர்‌. கோவை மத்திய மண்டல மகளிர் அணி தலைவர் ஷாஹிபா. கமருன்னிஷா அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்கள்.

ஜமாஅத் கோவை பெருநகரத் தலைவர் P.S.உமர் ஃபாருக் அவர்கள் மாநாட்டிற்கு தலைமை வகித்தார்கள். தொடர்ந்து மாநாட்டில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழ்நாடு மாநிலத் தலைவர் மௌலவி. முஹம்மது ஹனீஃபா மன்பஈ அவர்களும், அஸ்ஸலாம் இஸ்லாமியக் கல்லூரி பேராசிரியர் மௌலவி. முஹம்மது நூஹ் மஹ்ளரி அவர்களும், அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் செயற்குழு உறுப்பினர் ஷாஹிபா. ஃபாத்திமா முஸஃப்பர் அவர்களும் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழ்நாடு மகளிர் அணி செயலாளர் ஷாஹிபா. பாத்திமா ஜலால் அவர்கள் மாநாட்டு தீர்மானங்களை வாசித்தார்.

தொடர்ந்து மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் ஜனாப்.பீர் முஹம்மது அவர்கள் உறுதிமொழி வாசகங்களை வாசிக்க மாநாட்டில் பங்கேற்ற அனைவரும் அதனை வழிமொழிந்து எழுந்துநின்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

நிகழ்வில் GIO அறிமுகத்தினை கோவை மாவட்ட தலைவர் சகோதரி. மர்யம் ஃபர்ஹானா அவர்கள் வழங்கினார்கள். கோவை கிழக்கு மண்டல மகளிர் அணி தலைவர் ஷாஹிபா. அஸ்மாபீ அவர்கள் நன்றியுரை நவின்றார்கள். மாநாட்டு நிகழ்வினை கோவை தெற்கு மண்டல மகளிர் அணி தலைவர் ஷாஹிபா. சலீனா பாரி அவர்கள் அழகுற தொகுத்து வழங்கினார்கள்.

கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கு ஜமாஅத் கோவை பெருநகர மகளிர் அணி தலைவர் ஷாஹிபா. ஜஹீனா அஹமது அவர்கள் நினைவுப் பரிசுகளை வழங்கினார்‌.

நிகழ்வில் ஜமாஅத் தமிழ்நாடு துணைத் தலைவர்கள் ஜனாப். சிராஜ் அஹமது சாஹிப், ஜனாப். ஐ.ஜலாலுதீன் அவர்களும், மாநில அமைப்புச் செயலாளர் ஜனாப். K.ஜலாலுதீன் அவர்களும், கோவை வடக்கு மண்டல மகளிர் அணி தலைவர் ஷாஹிபா. பாத்திமுத்து அவர்களும், கோவை பெருநகரச் செயலாளர் மற்றும் கோவை மண்டலத் தலைவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அல்ஹம்துலில்லாஹ்.

#MoralityIsFreedom #JIH #Coimbatore