09.10.2023 திங்கள் கிழமை
மணப்பாறை காட்டுப்பட்டி பகுதியில் அன்னை அறிவு சார் குறைபாடு உடையோர் சிறப்பு பள்ளி மாற்றுத்திறன் குழந்தைகள் காப்பகம் மற்றும் தொழில் பயிற்சி முகாம் கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகின்றது.
சகோதர சமுதாயத்தை சார்ந்த
கண்காணிப்பாளர்
வி சக்திவேல் அவர்களின் மேற்பார்வையில் இந்த காப்பகம் இயங்கி வருகிறது.
இந்த காப்பகத்தில் சுமார் 12 சிறுவர்கள் பராமரிப்பில் இருக்கின்றனர்.
ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் மணப்பாறை சார்பில்
கிளையின் பொறுப்பாளர் காதர் அவர்களின் மேற்பார்வையில்
அந்த சிறுவர்களுடன் இரவு நேர உணவு உண்ண ஏற்பாடு செய்யப்பட்டது.
நிகழ்வில் மணப்பாறை நகர
ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் தலைவர் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டு சிறுவர்களுடன் அளவளாவி கண்காணிப்பாளர் அவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்த்தினார்.
மேலும்
குழந்தைகளுக்கு
இரவு உணவு வழங்கப்பட்டது.
எல்லாம் வல்ல இறைவனிடம் குழந்தைகளின் மேன்மைக்காக
பிரார்த்தனை புரியப்பட்டது.