News Channel

11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் மத்திய மற்றும் மாநில நிறுவனங்கள்/பல்கலைக்கழகங்களில் பயில்வதின் முக்கியத்துவம் மற்றும் வழிகாட்டி நிகழ்ச்சி

இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SiO) தஞ்சை மாவட்டத்தின் சார்பாக 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் மத்தியில் மத்திய மற்றும் மாநில நிறுவனங்கள்/பல்கலைக்கழகங்களில் பயில்வதின் முக்கியத்துவத்தையும், மேலும் கல்வி நிறுவனங்கள் குறித்தும், அதில் மாணவர்கள் எவ்வாறு சேர வேண்டும் என்பதையும், அதற்கான நுழைவு தேர்வுகளை பற்றியும் "Let's Step in to University" என்ற தலைப்பில் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி கும்பகோணத்தில் நடைபெற்றது.
முதல் நாளாக 16-08-2023 (நேற்று) கும்பகோணத்தில் உள்ள அல் அமீன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், முனைவர்.சலாவுதீன் மற்றும் உதவி பேராசிரியர்.ஷேக் அத்திப் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள்.
இரண்டாவது நாளாக 17-08-2023 (இன்று) கும்பகோணத்தில் உள்ள டான் அகாடமி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில், உதவி பேராசிரியர். முகமது ஜாஃபர் மற்றும் உதவி பேராசிரியர்.ஷேக் அத்தீப் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள்.
இந்த இரண்டு நாள் நிகழ்வில் மொத்தம் 400 க்கும் அதிகமான மாணவ மாணவிகள் பங்கேற்று பயன் பெற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்...