News Channel

பெண்களுக்கான ஒழுக்கமே சுதந்திரம் என்ற தலைப்பில் நிகழ்ச்சி

ஒழுக்கமே சுதந்திரம்.


ஜமாஅத்தே இஸ்லாமி  ஹிந்த் கிருஷ்ணகிரி மகளிர் அணியின் சார்பாக ஒழுக்கமே சுதந்திரம் பரப்புரையின் ஒரு அங்கமாக 
  (25.09.2024) மதியம் 3.45 மணி முதல் 5.00 மணி வரை அளவில்  யூசுஃப் தெருவில் உள்ள அஞ்சுமனே ஆஷிகானா  ரசூல் மதரசாவில் பெண்களுக்கான ஒழுக்கமே சுதந்திரம் என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியின் துவக்கமாக சகோதரி ஆபியா இறைவசனங்களை ஓதினார்.

சகோதரி நிஷா வரவேற்புரை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியின் சிறப்புரை:-
ஜமாஅத்தே இஸ்லாமி  ஹிந்த் கிருஷ்ணகிரியின்  பெண்கள் பிரிவின் சகோதரி அர்ஷியா அவர்கள்  மற்றும் சகோதரி. தாசின் அவர்கள்  பெண் சமூகத்த்தில் ஏற்படும் ஒழுக்க சீர்கேடுகள் மற்றும் அதன் தாக்கம் நாம் அதிலிருந்து பாதுகாத்துக் கொள்வது மற்றும் வழிமுறை குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் சிறப்பாக எடுத்துரைத்தனர்.

சகோதரி சல்மா இந்நிகழ்ச்சியை வழிநடத்தினர்.

இறுதியாக நன்றியுரை சகோதரி ஆபியா ஆற்றினார்....

இந்நிகழ்ச்சியில் 45-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டனர்.

எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே....