News Channel

கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி

" கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி "


ஊராம்பட்டியில் முதன் முதலில் பொது நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகில் உள்ள ஊராம்பட்டியில் 01/10/2023 அன்று காலை : 10:30 முதல் 12:30 வரை. ' பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கக்கூடிய மாணவ மாணவிகளுக்கு உயர்நிலை கல்வி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ' மதுரை இஸ்லாமிக் சென்டர் வழிகாட்டுதல் மூலமாக . "JIH-இஸ்லாமிய சென்டர் ஊழியர் வட்டம் ( ICC ) மற்றும் விருதுநகர் JIH- கிளை" ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது.

JIH - ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் செயல் திட்டத்தின் வழிகாட்டுதல் அடிப்படையில் முன்மாதிரி கிராமங்களை உருவாக்குதல் என்கின்ற செயலில் கல்வி, பொருளாதாரம், ஆரோக்கியம், இவைகளை மேம்படுத்துவதென முடிவு செய்யப்பட்டுள்ளது, அவ்வகையில் தலைமையின் வழிகாட்டுதலை ஒட்டி ஊராம்பட்டியில் கல்வி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த முடிவு செய்யப்பட்டு வெகு சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு " மதுரை இஸ்லாமிக் சென்டர் துணைச் செயலாளர் மற்றும் JIH - இஸ்லாமிக் சென்டர் ஊழியர் வட்ட ( ICC ) பொறுப்பாளருமான ஜனாப்: தாயீ - நஜீர் ஹுசைன் தலைமை ஏற்று நடத்தினார்.
ஊராம்பட்டி ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் ஜனாப்: அபூபக்கர் அவர்கள் முன்னிலை வகித்தார் . 


கல்வி விழிப்புணர்வு குறித்த வழிகாட்டுதல்களை விருதுநகர் JIH - கிளை உறுப்பினர் பேராசிரியர் ஜனாப்: சையது உசேன் அவர்களும் விருதுநகர் JIH - கிளை ஊழியர் ஜனாப்: முகமது ஹபிபுல்லா அவர்களும் வெகு சிறப்பாக மாணவ மாணவிகளுக்கு உயர்நிலை கல்வி குறித்தும், அரசு வேலை வாய்ப்புகளை பெறுவதை குறித்தும் அனுபவரீதியாக மாணவ மாணவிகளுக்கு இலகுவாக புரியக்கூடிய வகையில் சிறப்பாக வழிகாட்டுதல்கள் வழங்கினார்கள் .

இறுதியாக தமிழக "ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த் மாநில செயலாளரும் , மதுரை இஸ்லாமிக் சென்டர் செயலாளருமான மௌலவி: முஹைதீன் குட்டி உமரி" அவர்கள் கல்வி என்பது  மனிதனுடைய அடிப்படை உரிமையும் கடமை ஆகும். இஸ்லாம் இதை கடமையாக மனித குலத்துக்கு வழிகாட்டி தந்திருக்கிறது . இந்த கடமையை நிறைவு செய்யக்கூடிய வாய்ப்பு இங்கு அமைத்து இப்பொழுது நடத்திக் கொண்டிருக்கிறோம். பள்ளிவாசல் என்பது தொழுகைக்காகவும், நோன்பு காலங்களில் நோன்பு கஞ்சி பெறுவதற்காகவும், ஹஜ் பெருநாட்களில் குருபானிக்கான கடமைகள் நிறைவேற்றுவதற்காகவும், திருமணத்துக்காக என பள்ளிவாசலோடு தொடர்பு இருப்பதை மக்கள் கண்டுயிருப்பார்கள். அதுவும் பள்ளிவாசலில் கல்வி விழிப்புணர்வு நடத்துவது என்பது ஊராம்பட்டி மக்களுக்கு ஆச்சரியமாகவும் இருக்கலாம் ! ஆனால் எங்களுக்கு இது கடமை. ஆக இந்த கடமையை நாங்கள் இப்பொழுது நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம் இன்னும் தொடர்ந்து நிறைவேற்றுவோம் என்று நிறைவுரையில் கூறினார்கள்.
வருகை தந்த மாணவ - மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் பயனுள்ள வகையில் இந்நிகழ்வு தங்களுக்கு அமைந்துள்ளதாகவும் உயர்நிலை கல்வியை தேர்ந்தெடுப்பதற்கு பெரும்
உதவிகரமாக அமைந்திருப்பதாகவும் நெகிழ்வாக பாராட்டி சென்றனர். 

இன்னும், இந்த நிகழ்ச்சிக்கு சகோதர சமுதாயத்தை சார்ந்த மாணவ - மாணவிகள் 18 நபர்களும் முஸ்லிம் மாணவ - மாணவிகள் 18 நபர்களும் பெற்றோர்கள் என 70-க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டார்கள்


நிகழ்வின் இறுதியிலே தேநீர் விருந்து வழங்கப்பட்டு நிகழ்ச்சி  இனிதே நிறைவடைந்தது
 
அல்ஹம்துலில்லாஹ்....

-JIH - இஸ்லாமிக் சென்டர் ஊழியர் வட்டம் (ICC )