News Channel

மரக்கன்றுகள் நடப்பட்டது

இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) என்றைக்குமானவர் எல்லோருக்குமானவர்  இன்றைய தினம் (28.09.2023) நாச்சியார்கோயில் மற்றும் திருநறையூர் பகுதியில் 20 க்கு மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது.

இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள், லயன்ஸ் சங்க பொறுப்பாளர்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அவர்களுக்கு நபிகள் நாயகத்தை குறித்தும் இஸ்லாம் ஓர் வாழ்க்கை நெறி என்பதை பற்றியும் பேசி கலந்துரையாடப்பட்டது.

மரக்கூண்டின் மேல் பகுதியில் குர்ஆன், ஹதீஸ் மற்றும் பொதுவான கருத்துக்களை கொண்ட பிளக்ஸ் ஒட்டப்பட்டு, மக்கள் பார்த்து படித்து பயன்பெறும் வகையில் மரக்கன்றுகள் அமைக்கப்பட்டது.

நபிகள் நாயகத்தை அறிமுகம் படுத்தும் விதமாக நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டது. மேலும் நபிகளின் வரலாறு புத்தகங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.

எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே...

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் (JIH)
திருநறையூர் மற்றும் நாச்சியார்கோயில் வட்டம்