News Channel

40' ஆண்டுகாலமாக ஹஜ் பெருநாளன்று விளையாட்டுப் போட்டிகள்

"காயிதே மில்லத் நற்பணி மன்றத்தின் சார்பாக  40-வது ஆண்டு ஹஜ் பெருநாள் விளையாட்டுப் போட்டிகள்"

ராமநாதபுரம் ரமலான் நகரில் ஆண்டுதோறும் ஹஜ் பெருநாளை முன்னிட்டு அன்றைய தினத்தில் பல நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்படுகிறது.

ரமலான் நகர் என்கின்ற பகுதி உருவாவதற்காக தங்களுடைய சொந்த இடத்தை அப்பகுதி மக்களுக்கு வழங்கிய "மர்ஹும் முகமது ஜக்கரியா" அவருடைய நினைவாகவும் இந்த ஹஜ் பெருநாள் நிகழ்ச்சி தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. 

ரமலான் நகரில் இளைஞர்களுக்கென்று காயிதே மில்லத் பெயரில் சங்கம் உருவாக்கி 40  ஆண்டுகளாக ஹஜ் பெருநாளன்று இளைஞர்களுக்கு, சிறுவர்களுக்கு, பெண்களுக்கு என்று விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கபடுகிறது. 

அவ்வகையில் இந்த 2024-ம் ஆண்டும் ஹஜ் பெருநாளை முன்னிட்டு சிறப்பான ஏற்பாடுகளை காயிதே மில்லத் நற்பணி மன்றத்தின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டு, இந்நிகழ்ச்சிக்கு ரமலான் நகர் ஜும்மா பள்ளிவாசல் தலைவர், மற்றும் நிர்வாகிகள், ரமலான் நகர் ஜும்மா பள்ளிவாசல் உடைய தலைமை இமாமும் JIH ஊழியருமான மௌலவி சம்சுதீன் ஃபைஜி மற்றும் துணை இமாம் ஆலிம் சேக் அப்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்து இந்த நிகழ்ச்சியை சிறப்பாக நடத்திக் கொடுத்தனர். 

சமீப காலமாக பெருநாள் என்றாலே சினிமா, பார்க், பீச், மால்கள் என  பொழுதுபோக்குகளை தேடி அலையக்கூடிய நிலையில், ரமலான் நகரில் காயிதே மில்லத் நற்பணி மன்றத்தின் மூலமாக இப்படி விளையாட்டுப் போட்டிகள் மூலம் தங்களுடைய கொண்டாட்டங்களை கழித்திருப்பது மிகவும் பாராட்டத்திற்குரிய விஷயம். வெறுமனே விளையாட்டுப் போட்டிகளாக அமைக்காமல் தொடர்ந்து அதற்கான திட்டமிடப்பட்டு மன்றத்தின் இளைஞர்களால் பொது நிதி உருவாக்கி மிகப்பெரிய பொருட்செளவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பரிசுகள் வழங்கி அவர்களை ஊக்குவிக்கப் படுகிறது.

ஆண்களுக்கு :
👉கபடி, 
👉கிரிக்கெட், 
👉வாலிபால், 
👉ஃபுட்பால், 
👉பானை உடைப்பு ,
👉லாங் ஜம்ப், 
போன்ற நிகழ்ச்சிகளும்.

👉இளைஞர்களுக்கு : 20க்கும் மேற்பட்ட போட்டிகளும், 

📌பெண்களுக்கு : 
👉சமையல் போட்டி 
👉கட்டுரை போட்டி இன்னும் 14 வகையான போட்டிகளும்,   

👉சிறுவர் சிறுமிகளுக்கு : 
10க்கும் மேற்பட்ட போட்டிகளும் , 

👉மதரஸா மாணவ-மாணவிகளுக்கு: 
மார்க்க சம்பந்தப்பட்ட பயான் நிகழ்ச்சியும்.

தொடர்ந்து ஒவ்வொரு வருடம் என கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக ஹஜ்  (பக்ரீத்) பெருநாள் அன்று 
நடைபெற்று வருகிறது.

இந்த 2024 ஆண்டும் வெகு சிறப்பாக ஹஜ் பெருநாள் அன்று காயிதே மில்லத் நற்பணி மன்றத்தின் சார்பாக ரமலான் நகரில் பல விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.