"பள்ளிக்கூடத்தில் பக்ரீத் பண்டிகை"
மதுரை மாவட்டம் காண்டை ஊரில் காண்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் படிக்கக்கூடிய அஸதுல்லா என்கின்ற மாணவர் 14/6/2024 வெள்ளிக்கிழமை காலை பள்ளிக்கூட பிரேயரில் பக்ரீத் பண்டிகை குறித்த செய்திகளை எடுத்துரைத்தார்.
அதன் விவரம் ; அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் ஏழாம் வகுப்பு பயிலக்கூடிய மாணவர் இடத்தில் ஏழாம் வகுப்பின் ஆங்கில பாடத்தில் வருகின்ற பெஸ்டிவல் என்கின்ற தலைப்பில் உள்ள பக்ரீத் பண்டிகை குறித்த செய்திகளை விளக்கமாக கூறுமாறு பணிக்கப்பட்டு இருந்தார். அந்த மாணவரும் எனக்கு அவ்வளவாக தெரியாது என்று கூற , அந்த தலைமை ஆசிரியர் நம்ம காண்டை ஊரில் உள்ள பள்ளிவாசல் இமாம் அவரிடத்தில் கேட்டு நாளை காலையில் நடைபெறக்கூடிய பிரேயரில் பள்ளிக்கூடத்தில் உள்ள அனைத்து மாணவ மாணவிகளுக்கும் பக்ரீத் பண்டிகை குறித்த விளக்கத்தை தருமாறு 13/6/2024 வியாழக்கிழமை அன்று கூறியிருந்தார் .
அதன் அடிப்படையில் மாணவர் அஸதுல்லா காண்டை ஜும்ஆ பள்ளிவாசல் இமாம் மௌலவி , அப்துல் மாலிக் அவர்களிடம் கூற, அது சமயம் JIH- ஊழியர் வட்ட பொறுப்பாளரும் மதுரை இஸ்லாமிக் சென்டர் துணைச்செயலாளர் ஜனாப், நஜீர் ஹுசைன் அவர்கள் அங்கு இருந்தமையால் இமாம் அவர்கள் அவரிடத்தில் இந்த மாணவருக்கு தேவையான செய்திகளை தருமாறு கேட்டுக் கொண்டார். அவர் கேட்டுக்கொண்ட அடிப்படையில் அவரும் பக்ரீத் பண்டிகை குறித்து ஐந்து குறிப்புகளாக அந்த மாணவருக்கு எடுத்துச் சொல்லி அதை அந்த மாணவர் தனக்கே உரிய பாணியில் எழுதிக் கொண்டு 14/6/2024 அன்று காலையில் பள்ளிக்கூடத்தில் உரை நிகழ்த்தினார்.
இந்த மாணவன் மிகச் சிறப்பான முறையில் அதை செய்தார் பள்ளிக்கூடமே அவரை வெகுவாக பாராட்டி அவருக்கு வாழ்த்து தெரிவித்தது மட்டுமல்லாமல் பள்ளிக்கூட கோப்புகளில் இந்த மாணவனுடைய பதிவு குறிப்பை நாங்கள் பத்திரமாக வைத்துக் கொள்கிறோம் என்று அந்த தலைமை ஆசிரியர் கூறியதோடு இந்த மாணவனுக்கு இப்படியொரு ஊக்கத்தை கொடுத்த காண்டை ஜும்ஆ பள்ளிவாசல் இமாமும் JIH ஊழியருமான மௌலவி, அப்துல் மாலிக் அவர்களை பாராட்டினார்கள்.