• திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு தமிழ்மாநில ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் ஆதரவு

News Channel

கோவை மத்திய மண்டலத்தின் பாத்திமா நகர் வட்டத்தின் சார்பாக குழந்தைகளுக்கான கோடைக்கால இஸ்லாமிய வகுப்புகள் நடைபெற்றது .

 பாத்திமா நகர் வட்டத்தின் சார்பாக குழந்தைகளுக்கான கோடைக்கால இஸ்லாமிய வகுப்புகள் மே 20,21,22 காலை 10:30 மணி முதல் 12:30 மணி வரை மூன்று நாட்களாக நடைபெற்றது.

கடைசி நாளான இன்று (22.05.24 ) குழந்தைகளுக்கு ஓவியம் வரைதல் போட்டிகள் வைக்கப்பட்டு அவர்களின் திறமையை அழகான முறையில் வெளிப்படுத்தினார்.

இம்மூன்று நாட்களாக நடைபெற்ற வகுப்புகளில் கலந்து கொண்டவர்களுக்கும், விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கும் இன்று பரிசுகள் வழங்கப்பட்டன.

மேலும் இந்நிகழ்ச்சியை பாத்திமா நகர் வட்டப் பொறுப்பாளர் சகோதரி சாயிதா அவர்களும், CIO பொறுப்பாளர் சகோதரி ரஷீதா அவர்களும் , மற்றும் ஊழியர்கள் அனைவரும் சிறப்பாக இந்நிகழ்ச்சியை வழி நடத்தினார்கள்.

இந்நிகழ்வுகளில் சுமார் 20 குழந்தைகளும்,10 பெண்களும் கலந்து கொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்.