• திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு தமிழ்மாநில ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் ஆதரவு

News Channel

கோடைகால இஸ்லாமிய வகுப்பு நிறைவு விழா

இஸ்லாமிக் சென்டர் வேலூர் (ICV) மற்றும் இஸ்லாமிக் சென்டர் மதுரை (ICM) மாணவர் விடுதி சார்பாக இஸ்லாமிக் சென்டர் வேலூர் (ICV) துவங்கப்பட்ட கால முதல் ஒவ்வொரு ஆண்டும் பள்ளிக்கூட தேர்வு விடுமுறை சமயத்தில் கோடைகால இஸ்லாமிய வகுப்பு நடத்தப்பட்டு வருகின்றது. 

இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக மரியாதைக்குரிய ஜனாப்: கே. ஜலாலுதீன் 
(ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் (JIH ) மாநில அமைப்பு செயலாளர்) அவர்கள் வருகை புரிந்து விழாவை சிறப்பித்தார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் கோடைகால இஸ்லாமிய வகுப்பில் இஸ்லாமிக் சென்டர் மதுரை கீழ் இருக்கக்கூடிய கிராமங்களில் உள்ள மாணவ- மாணவிகளை அழைத்து அவர்களுக்கு இஸ்லாமிய பண்பியல் ஒழுக்க போதனைகள் தொடர்ந்து கொடுக்கப்பட்டு வருகிறது. 
சமூகத்தில் உலக கல்விக்கு கொடுக்கும் முக்கியத்துவம், அக்கறை, ஆர்வம் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இவைகளைப் போன்று மார்க்க கல்விக்கு வழங்குவது இயல்பாகவே குறைந்து காணப்படுகிறது. அதனால் சமூகத்தில் குழந்தைகள் மார்க்கப்பற்று இல்லாதவர்களாக, ஈமானிய ஆர்வமில்லாதவர்களாக, இறையச்சம் அதிகமாக உருவாக்கிக் கொள்ளாதவர்களாக, ஒழுக்க ரீதியாக, பண்பாடு ரீதியாக, அவர்களை மேம்படுத்திக் கொள்ளாத குழந்தைகளை சமூகத்தில் நாம் பரவலாக காண முடிகிறது. 
இப்படியான குறைகளை இஸ்லாமிக் சென்டர் கீழ் இருக்கக்கூடிய ஊர்களில் இருந்து விடக் கூடாது என்பதற்காக கடந்த 37 ஆண்டுகளாக தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் பெண் குழந்தைகளுக்கு இஸ்லாமிக் சென்டர் வேலூரில் ஆண் குழந்தைகளுக்கு இஸ்லாமிக் சென்டர் மதுரையிலும் நடத்தப்பட்டு வருகிறது. 

இந்த ஆண்டும் 37 ஆவது ஆண்டாக வேலூரில் கடந்த 30. 4. 2024 முதல் 10 5. 2024 வரையும் அதேபோல ஆண்களுக்கு 13.5. 2024 முதல் 22 5 2024 வரை நடத்தப்பட்டன. 

இந்த கோடைகால இஸ்லாமிய வகுப்பு என்பது ஒரு பள்ளிக்கூட வகுப்பு அமைப்பில் நடத்தப்படுகின்றன காலை பஜர் தொழுகையில் இருந்து இரவு இஷா தொழுது உணவு உண்டு உறங்கும் வரை பலவகையான பயிற்சிகளும், வழிகாட்டுதலும் தொடர்ந்து கொடுக்கப்பட்டு வந்தது. 
இங்கு நடைபெரும் கோடைகால இஸ்லாமிய என்பது பகலிலே வந்து பயிற்சி எடுத்து மதியம் வீடு திரும்பி வரக்கூடிய அமைப்பில் அல்லாமல் 10 நாளும் பல ஊர்களில் இருந்து மாணவர்கள் வந்து தங்கி பயிற்சிகளை பெறக்கூடிய நிலையில் அமைக்கப்பட்டிருக்கிறது. 
இங்கு அடிப்படையாக கோடைகால இஸ்லாமிய வகுப்பில் நான்கு பாடத்தை மையமாக வைத்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகின்றன 
👉கொள்கை விளக்கம் 
👉சட்ட விளக்கம் 
👉உரிமைகள் கடமைகள் 
👉மனப்பாடம் 
ஆகிய பாடங்களை நான்கு ஆசிரியர்களை கொண்டு  மாணவர்களை நான்கு வகுப்பாக பிரித்து காலை 9 முதல் மதியம் 12:30 மணி வரை இந்த வகுப்பு நடைபெறும். அதேபோல மதிய வேளையில் 12:30 வரை சிறப்பு விருந்தினர்களை கொண்டு மாணவர்களுடைய தனிப்பட்ட ஆளுமைகளை, மார்க்க பற்றை, ஈமானிய சிந்தனையை வளர்த்திக் கொள்ளக் கூடிய வகையில் சிறப்பு விருந்தினர்கள் கொண்டு சிறப்பு அமர் அவர்கள் நடத்தப்படுகின்றன. மதிய வேலைக்குப் பிறகு மதியத்திலிருந்து இருந்து மாலை 6 மணி வரை மாணவர்களுக்கு விளையாட்டுக்கான ஆர்வத்தை ஊட்டப்படுகிறது. காரணம் ! தற்பொழுது மாணவர்கள் மொபைல் போனில் அடிமையாகி தங்களுடைய திறமைகளையும், ஆற்றல்களையும், ஆயுளையும் இழந்து வருவது ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள பெற்றோர்களுக்கு கவலையின் உச்சாணியாக இருந்து வருகிறது. இந்த நிலையை மாற்றுவதற்காக விளையாட்டில் அவர்களை ஆர்வப்படுத்தப்பட்டு 
👉வாலிபால் 
👉கபடி 
👉ரிங் பால் 
இன்னும் அவர்களுக்கு பிடித்த விளையாட்டுகளை விளையாட வைக்கப்பட்டது. 

ஒவ்வொரு நாளும் மக்ரீத் தொழுகைக்கு முன்பும் பின்பும் குர்ஆன் திலாவத் நடத்தப்படும் மாணவருடைய குர்ஆன் ஓதுதலை கோடைகால இஸ்லாமிய வகுப்பிற்கு வருகை புரிந்த மாணவரிடத்திலே சரிபார்க்கப்பட்டு அதிலே அவர்களை மேம்படுத்தப்படுகின்றன.
மாலை மஃரிப்புக்கு பிறகு பகலில் நடத்தப்பட்ட பாடத்தை பாடம் பார்க்க வைத்து (ஸ்டடி) செய்யப்பட வைக்கப்படுகிறது . 

இப்படியாக ஒவ்வொரு நாளும் கடந்த 10 நாட்களில் ஃபஜ்ர் தொழுகையிலிருந்து இருந்து குர்ஆன் தஸ்கீரில் ஆரம்பித்து 

காலை பாடம் பார்த்தல்
காலை தேனீர், சிற்றுண்டி 
காலை உணவு 
Preyar
வகுப்புகள்
சிறப்பு அமர்வுகள்
லுஹர் தொழுகை
மதிய உணவு
ஓய்வு
அஸர் தொழுகை 
விளையாட்டு
மாலை தேனீர், சிறுதானியங்கள்
மஃரிப் தொழுகை 
குர்ஆன் திலாவத்
மாலை பாடம் பார்த்தல் 
இஷா தொழுகை
இரவு உணவோடு 
ஒருநாள் நிகழ்வு முடிவடைகிறது. 

நிறைவு நாளுக்கு முன்பாக நடத்தப்பட்ட பாடத்தில் இருந்து அவர்களுக்கு தேர்வு நடத்தப்படும். 
👉எழுத்து தேர்வு
👉Practical exam (நடைமுறை தேர்வு)
👉ஓவிய போட்டி 
நடத்தப்படும் . அதில் மதிப்பு அதிகம் பெறக்கூடிய மாணவர்களுக்கு நிறைவு விழா நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பு விருந்தினர்களை வரவழைத்து மாணவர்களுக்கும், ஜமாத்தார்களுக்கும், பெற்றோர்களுக்கும்  வழிகாட்டுதல் வழங்கி, தேர்வில் வெற்றி அடைந்த மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டு ஊக்கம் அளிக்கப்படுகிறது.

அதோடு மட்டுமல்லாமல் கோடைகால இஸ்லாமிய வகுப்பிற்கு வரக்கூடிய அனைத்து மாணவர்களுக்கு நினைவு பரிசாக பரிசும் வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் கோடைகால இஸ்லாமிய வகுப்பை இவ்வகையில் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த 37-ம் ஆண்டும் இப்படியான நிகழ்வோடு இந்த நிகழ்வு நிறைவடைந்தது.