News Channel

சமய நல்லிணக்க தண்ணீர் பந்தல்

 மே 12 2024 மணப்பாறை பகுதியில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் பால்குட திருவிழாவில் மணப்பாறை பகுதி
 JIH கிளை மற்றும் மணப்பாறை ஜும்மா பெரிய பள்ளிவாசல் இணைந்து நடத்தும் தண்ணீர் பந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. மணப்பாறை பகுதியில் வரும் பக்தர்களுக்கு கோவில்பட்டி ரோட்டில் மணப்பாறை
 JIH கிளை மற்றும் மணப்பாறை ஜும்மா பெரிய பள்ளிவாசல் நிர்வாகத்தின் சார்பில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு வருகின்ற சகோதரர்களுக்கு நீர் மோர் மற்றும் குளிர்பானம் வழங்கப்பட்டது. 
நிகழ்ச்சியில் JIH மணப்பாறை கிளையின் தலைவர் சகோதரர் ஜபருல்லா செயலாளர் சகோதரர் காதர் மற்றும் மணப்பாறை ஜும்மா பெரிய பள்ளிவாசல் தலைவர் சகோதரர் முகமது அனிபா மற்றும் துணைத் தலைவர் சகோதரர் பகுருதீன்  ஆகியோர் கலந்து கொண்டார்கள். 
திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
விழாவிற்கு வருகை புரிந்த மக்களுக்கு தாகத்தை தீர்ப்பது  சிறந்த அறம் மற்றும் இஸ்லாத்திற்கு ஆதரவான சிந்தனையை மக்கள் மனதில் உருவாக்கும் அடிப்படையிலும்  ,மாற்று மத சகோதரர்களுடன் இணக்கமான உறவை பேணும் வகையிலும் மேலும் இஸ்லாத்திற்கு ஆதரவாக  மக்கள் நிலைப்பாட்டை மாற்றும் எண்ணத்தின் அடிப்படையிலும் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. 
விழாவில் மணப்பாறை கிளையின் உறுப்பினர்கள் கலந்து கொண்டு தயாரிப்பு பணியிலும் விநியோக பணியிலும் சிறப்பாக ஈடுபட்டார்கள் மேலும் இந்த தண்ணீர் பந்தல் நிகழ்வானது சமய நல்லிணக்கத்திற்கு மிகச்சிறந்த உதாரணமாக இருக்கின்றது என்று மாலை முரசு வெளியிட்ட பத்திரிக்கை செய்தி காட்டுகின்றது. 
காலை சுமார் 4 மணிக்கு தொடங்கப்பட்ட நிகழ்ச்சியானது 10 மணி அளவில் இறையருளால் இனிதே நிறைவுபெற்றது.