பத்திரிக்கைச் செய்தி*
ஹல்த்வானியின் மீது காவல்துறையின் அத்துமீறல் குறித்து ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கண்டிக்கின்றது.
புதுடெல்லி, 10 பிப்ரவரி:
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் -ன் அகில இந்திய தலைவர் சையத் சஆதத்துல்லாஹ் ஹுசைனி அவர்கள் ஹல்த்வானியில் காவல்துறையின் அத்துமீறலை கடுமையாக கண்டித்துள்ளார்.
மேலும்,அதிகாரிகள் தங்கள் தலைவர்களின் அரசியல் நலன்களுக்காக முஸ்லிம் சமூகத்தை திட்டமிட்ட முறையில் துன்புறுத்துவதாக குற்றச்சாட்டை வரையறுத்துள்ளார்.
மேலும் செய்தியாளர்களிடம் இது தொடர்பாக சையத் சஆதத்துல்லாஹ் ஹுசைனி வெளியிட்டுள்ள கூற்றில்,உத்தரகாண்ட் மாநிலத்தினுடைய ஹல்த்வானியில் முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் காவல்துறை அட்டூழியத்தை கண்டிக்கிறோம்.
ஹல்த்தவானி ரயில் நிலையத்தை நெருங்கிய நிலத்தில் அனுமதி இன்றி ஆக்கிரமித்திருப்பதாக கூறப்படும் சட்ட சம்பந்தமான விவாதத்தின் வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தும் மதரசாவை திடீரென இடிக்க வேண்டிய அவசியம் ஏன்? காவல்துறை பயன்படுத்திய முறை கொடூரமானது ,பல முஸ்லீம் போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டுள்ளது மிகவும் கண்டிக்கத்தக்கது. மேலும் தொழில்முறை காவல்துறையானது கலாச்சார சமூகத்தின் அனைத்து தர்க்கங்களையும் மீறுகிறது என்ற குற்றச்சாட்டுடன் இயந்திர துப்பாக்கிகளும் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் காவல்துறையின் ஏதோ எதிரிகளின் சேனாவுடன் சண்டை இடுவது போல் நூற்றுக்கணக்கான ரவுண்டுகள் சுடப்பட்டது .
இதன் அடிப்படையில் ஜமாஅத் தலைவர் கூறியதாவது,”தற்போதைய நிலை வெவ்வேறு அரசுகளால் மேற்கொள்ளப்பட்ட பல நடவடிக்கைகள் மக்களை வன்முறை உணர்வுகளை தூண்டுவதற்கான அருவருப்பான நோக்கமும் வெளிப்படுகிறது.முஸ்லிம்களுடைய மஸ்ஜித்கள் இடிக்கப்பட்டாலும்,முஸ்லிம்களுடைய இமாம்கள் கைது செய்யப்பட்டாலும்,முஸ்லிம் தனியார் சட்டத்தில் தேவையற்று குறிக்கிட்டாலும், புல் டவுசர் நடவடிக்கை மூலம் சொத்துக்கள் அளிக்கப்பட்டாலும், முஸ்லிம்களுக்கு எதிராக கொடூரமான வெறுப்பு குற்றங்களை செய்த குற்றவாளிகளுக்கு இங்கே பாதுகாப்பு கொடுக்கப்படுகிறது.இது போன்ற எல்லா வழக்குகளிலும் சட்ட நடவடிக்கையின் தேர்வு மற்றும் குறிப்பிடப்பட்ட விண்ணப்பம் தெளிவாக உள்ளது என்பதனுடைய சட்டத்தை முஸ்லிம்களிடத்தில் பிரச்சினை செய்யவும் அச்சுறுத்தல்களின் ஆயுதமாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது நமது ஜனநாயகத்திற்கு ஆபத்தான முறை மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கு அழிவை ஏற்படுத்தும் என்பதை நாங்கள் உணர்கிறோம்”.
ஹல்த்வானியின் நிலைமையை சீர்ப்படுத்துவதுப் பற்றியும் ஜமாஅத் தலைவர் கூறியதாவது,”2023 ஜனவரியில் இதே வழக்கில் இந்திய உச்சநீதிமன்றம் இரவோடு இரவாக 50,000 மக்களுக்கும் தீர்ப்பு கொடுக்கப்படவில்லை. இந்த மனிதாபிமான பிரச்சினைக்கு சமாதான தீர்வு காண பட வேண்டும்.
நைனிதால் மாவட்ட நிர்வாகத்தின் இந்த இழிவான செயல் முற்றிலும் நியாயமற்றது, இவ்வாறான பாரபட்சமான வழிகாட்டுதல்களை உச்ச நீதிமன்றம் அலட்சியம் செய்கின்றது.
ஜமாஅத் மற்றும் சிவில் சமூகத்தின் தலைமையில் உண்மையை கண்டறியும் ஒரு குழு ஹல்த்வானியின் மீது தாக்கியது மட்டுமல்லாமல் வெளியேற்றுவதற்கான நடைமுறைகளை பின்பற்றுவதில் தீவிரமான முரண்பாடுகளை காட்டும் அறிக்கையை அம்பலப்படுத்தியது.
ரயில்வே அதிகாரிகளுக்கும், மக்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை மூலம் இணக்கமான புரிதல் வரும் வரை இடிப்பு பிரச்சாரத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என கோருகின்றோம்.
நிர்வாக இயந்திரம் மற்றும் அரசியல் தலைமையின் இத்தகைய தேர்ந்தெடுக்கப்பட்ட அணுகுமுறைக்கு எதிராக உடனடியாக இந்திய உச்சநீதிமன்றம் நடவடிக்கை எடுக்க கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் இதற்கு காரணமான அதிகாரிகள் மீது உடனடியாக பணி நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
இந்த ஆபத்தான முறைக்கு எதிராக குரல் எழுப்புமாறு இந்திய மக்களிடமும், சிவில் சமூகத்திடமும் கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் வகுப்புவாத பிளவுகளை உருவாக்கி அதன் மூலம் தாக்குதல் முயற்சிகளுக்கு எதிராக ஒன்று பட்டு போராடுவோம்”.
வெளியீடு
கே.கே. சுஹைல்,
தேசிய செயலாளர், ஊடகத்துறை, ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், முக்யாலய,
மொபைல் : 7290010191
முகவரி-D-321, அபுல் ஃபஸ் ஸ் என்க்ளேவ்,
ஜாமியா நகர், ஓக்லா,
புது டெல்லி-110025.