News Channel

ஆதரவற்ற சகோதர சகோதரிகளுக்கு போர்வை வழங்கும் நிகழ்ச்சி

டிசம்பர் 13 2023ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்  மணப்பாறை கிளையின் சார்பில் தலைவர் ஜபருல்லா மற்றும் ஆர்வலர்கள் உதவியுடன் மணப்பாறை பகுதியில் வாழும் ஆதரவற்ற சகோதர சகோதரிகளுக்கு போர்வைகள் வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.
 அதன் அடிப்படையில் மணப்பாறை பகுதியில் குளிரால் வாழும் ஆதரவற்ற சகோதர சகோதரிகளை  கண்டறிந்து அவ்விடங்களுக்குச் சென்று அவர்களுக்கு போர்வைகள் வழங்கப்பட்டது.ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் 
 அடிப்படைக் கொள்கைகளான மக்களுக்கு  சேவை செய்ய வேண்டும் என்கின்ற எண்ணத்தின் அடிப்படையில் இந்த பணி செய்யப்பட்டது.

 பேருந்து நிலையம் ரயில் நிலையம் மற்றும் கோவில் இவற்றின் அருகாமையில் குளிரில் வாடும்  ஆதரவற்ற சகோதர சகோதரிகளுக்கு  போர்வைகள் வழங்கப்பட்டது.

 நிகழ்வில் JIH  மணப்பாறை பகுதி தலைவர் ஜபருல்லா மற்றும் கிளையின் ஆர்வலர்கள்  கலந்து கொண்டனர்.