News Channel

சாலிடாரிட்டி இளைஞர் அமைப்பு சார்பாக திருச்சியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது

சாலிடாரிட்டி இளைஞர் அமைப்பு திருச்சி மாவட்டத்தின்  சார்பாக *இஸ்லாத்திற்கு எதிரான வெறுப்பை வேரறுப்போம்! அன்பை விதைப்போம்!!* என்ற மையகருத்தில்  மாபெரும் பொதுக்கூட்டம் 23.09.2023 (சனிக்கிழமை) மாலை 7 மணியளவில்  திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில் நடைபெற்றது. இதில் சாலிடாரிட்டியின் மாநிலத் தலைவர் கமாலுதீன் அவர்கள்  தலைமை தாங்கினார். பொதுக் கூட்டத்தின் அறிமுக உரையை சாலிடாரிட்டியின் மாநில செயற்குழு உறுப்பினர் மௌலவி.நாசர் புஹாரி அவர்களும்,  வாழ்த்துரையை சாலிடாரிட்டியின் மாநில காப்பாளர் மௌலவி ஹனிபா மன்பஈ அவர்களும் , SIO மாநில தலைவர் அஹமது ரிஸ்வான் அவர்களும்,  அருட்தந்தை சார்லஸ் அவர்களும் நிகழ்த்தினார்கள்.  *இஸ்லாமிய வெறுப்பு என்பது  இந்தியாவின் இறையாண்மைக்கு எதிரானது* எனும் தலைப்பில் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை ஒருங்கிணைப்பாளர் *பேரா.அருணன்* அவர்களும்,  *இஸ்லாமிய வெறுப்பின் பன்மை முகமும் அதனை எதிர்கொள்ள வேண்டிய வழிமுறைகளும்* எனும் தலைப்பில் சமரச இதழின் பொறுப்பாசிரியர் *வி.எஸ்.அமீன்* அவர்களும் சிறப்புரையாற்றினர்கள்.
சாலிடாரிட்டியின் மாநில துணைச் செயலாளர் ஜாபர் அவர்கள் கீழ்காணும் பொதுக்கூட்ட தீர்மானங்களை வாசித்தார்.
• தேசிய குற்றப் பதிவுகள் முகாமை (NCRB) முஸ்லிம் வெறுப்புக் குற்றங்களைத் தனியாக வகைப்படுத்த வேண்டும்.
• இஸ்லாமோ ஃபோபியாவுக்கு எதிராக மத்திய மாநில அரசுகள் சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும்.
• ரமேஷ் பிதூரி எம்.பி மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரை தகுதி நீக்கம் செய்வதோடு தேர்தலில்  போட்டியிடவும் தடை விதிக்க வேண்டும்.
• தமிழக அரசு வாழ்நாள் முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலை தொடர்பாக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி அவர்களை விரைவாக விடுதலை செய்ய வேண்டும்.
• சிறுபான்மையினருக்கும், தலித்களுக்கும், பழங்குடியினருக்கும் எதிரான தொடர் நடவடிக்கைகளை ஒன்றிய அரசு உடனே நிறுத்த வேண்டும்.
நிகழ்வின் இறுதியாக சாலிடாரிட்டியின் திருச்சி மாவட்டத் தலைவர் இஸ்மாயில் நன்றி உரை நிகழ்த்தினார்.
சாலிடாரிட்டியின் மாநில செயற்குழு உறுப்பினர் பீர் முஹம்மத் அவர்கள்  இந்நிகழ்வை சிறப்பாக வழி நடத்தினார்.
500க்கும் மேற்பட்ட  பொதுமக்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.