ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தேசிய துணைத் தலைவர் மலிக் முஃதஸிம் கான் அவர்களின் திருச்சி வருகையை முன்னிட்டு இன்று காலை 10:40 மணி முதல் 12 : 40 மணி வரை ஆலிம்களுக்கான சிறப்பு சந்திப்பு நிகழ்ச்சி நமது பீமநகர் இலாஹி பள்ளிவாசலில் நடைபெற்றது.
நமது மாநகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து பிரத்தியேகமாக அழைக்கப்பட்டிருந்த ஆலிம் பெருமக்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் மாநில நிர்வாக பெருமக்கள்
ஜனாப். ஜலாலுதீன்
ஜனாப். யூசுஃப் பாஷா
ஜனாப். சிராஜ் அஹ்மத்
திருச்சி கிளை தலைவர்
ஜனாப். ஹஜ் மைதீன்
சத்தியச்சோலை பொறுப்பாளர்
ஜனாப். நாசர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியின் தொடக்கமாக மணப்பாறை மஸ்ஜித் தக்வா -வின் இமாமும் ஜமாஅத்தின் உறுப்பினருமான மௌலவி. ஜாஃபர் ஹுசைன் மன்பயீ அவர்கள் கிராஅத் ஓதினார்.
தொடக்க உரையாற்றிய ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மாநில தலைவர் மௌலவி முஹம்மது ஹனீஃபா மன்பயீ அவர்கள்...
முஸ்லிம்கள் இஸ்லாத்தை சரியாக புரிந்து கொள்ள வேண்டிய முறையில் புரிந்து கொள்ளவில்லை. இபாதத்துகள் மட்டும் தான் இஸ்லாம் என்றும் இபாதத் அல்லாத விஷயங்களில் இஸ்லாம் எதுவும் வழிகாட்டவில்லை என்ற வகையில் இஸ்லாத்தை புரிந்து கொண்டுள்ளனர். ஆகவே தான் இபாதத்திற்கு தரக்கூடிய முக்கியத்துவத்தை மற்ற ஏனைய இறைவழிகாட்டுதல்களுக்கு முஸ்லிம்கள் தருவதில்லை.
அத்துடன் முஸ்லிம் அல்லாத மக்களுக்கு இஸ்லாத்தை முஸ்லிம்கள் சொல்லாத காரணத்தால் அரைகுறையாக தப்பும் தவறுமாக இஸ்லாத்தை ஊடகங்கள் வாயிலாக முஸ்லிமல்லாத மக்கள் தெரிந்து கொள்கிறார்கள். அதன் அடிப்படையில் இஸ்லாத்தைப் பற்றிய தவறான அபிப்பிராயத்தை உருவாக்கிக் கொள்கின்றனர் . அதன் விளைவு முஸ்லிம்களுக்கும் மற்றவர்களுக்குமான இடைவெளி இதுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
ஆகவே முஸ்லிம்கள் இஸ்லாத்தை மிகச் சரியாக புரிந்து கொண்டு முஸ்லிம்கள் மூலம் இஸ்லாம் மற்ற மக்களுக்கு அறிமுகமாகின்ற நிலை ஏற்படும் போது பெரிய அளவில் அரசியல் விழிப்புணர்வு இந்த சமூகத்தில் உருவாகும் என்பதை மிகத் தெளிவாக எடுத்துரைத்தார்.
தேசிய துணை தலைவர் அவர்கள் ஆலிம் பெருமக்கள் பிராந்திய மொழிகளில் பாண்டித்துவம் பெறுவதோடு பொதுமொழி ஒன்றையும் கற்றுக் கொள்ள வேண்டும்.
பிரிவு சட்டங்களில் மத்ஹப் சார்ந்த கருத்து வேறுபாடுகளுக்கு முக்கியத்துவம் தராமல் அனைத்து தரப்பு மக்களையும் அரவணைக்க வேண்டும்.
வெறும் தேர்தல் காலங்களில் மட்டுமல்லாமல் மற்ற நாட்களிலும் அரசியல் விழிப்புணர்வுக்கான கருத்துகளை முன்வைக்க வேண்டும்.
முஸ்லிம் அல்லாத பொதுமக்களுடனான தொடர்பை முஸ்லிம்கள் மிகப் பெரிய அளவில் உருவாக்கிக் கொள்ள வேண்டும். முஸ்லிம்களும் முஸ்லிம் அல்லாத மக்களும் பிரிந்து விடவேண்டும் என்றே வகுப்புவாதிகள் விரும்புகின்றார்கள். அவர்களுடைய விருப்பத்தை நாம் நினைவாக்கி விடக்கூடாது .பெரும்பான்மை மக்களுடனான நிலையான தொடர்பு தான் பாசிசத்தை வேர் அறுக்கும்.
தேசிய துணைத் தலைவரின் மொழியாக்கம் மற்றும் கருத்து சுருக்கத்தினை மாநில செயலாளர் எஸ் என் சிக்கந்தர் அவர்கள் வழங்கினார்.
தொடர்ந்து ஆணி பெருமக்கள் தங்களுடைய கருத்துக்களை பின்வருமாறு பதிவு செய்தனர்.
# முஸ்லிமல்லாத மக்களுடன் தொடர்பு வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற வகையில் இங்கே சிந்திப்பதற்கு கூட யாரும் இல்லாத நிலையில் ஜமாஅத் இதை நினைவூட்டி இருப்பது அதை விவாத பொருளாக மாற்றி இருப்பது உண்மையில் வரவேற்கத்தக்க விஷயமாகும்.
# முஸ்லிம் அல்லாத மக்களுக்கு இஸ்லாத்தை எடுத்துச் சொல்வது அவசியம். ஏனென்றால் பெரும்பான்மை மக்களின் நிழலில் தான் நம் வாழ்கின்றோம். அவர்களை புறக்கணித்துவிட்டு வாழ இயலாது எனும் பொழுது இஸ்லாத்தை எடுத்து சொல்வது தவிர்க்க முடியாத கடமையாகி விடுகிறது.
# கல்வி வளர்ச்சிக்கு ஜமாஅத் போன்ற அமைப்புகள் பெருமளவில் செலவழிக்க வேண்டும். ஏழை எளிய மாணவர்களின் உயர கல்விற்கு பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்.
# முஸ்லிம் அல்லாத மக்களுக்கு இஸ்லாத்தை எடுத்துச் சொல்லும்போது தான் முஸ்லிம்கள் எந்த அளவிற்கு இஸ்லாமிய அச்சிலிருந்து விலகி இருக்கின்றார்கள்... பாவமான காரியங்களை செய்கின்றார்கள்... என்கிற புரிதல் ஏற்படுகின்றது. ஆகவே முஸ்லிம்கள் தம்மை செம்மைப்படுத்திக் கொள்வதற்கு அழைப்பு பணி அவசியமாகிறது.
இத்தகைய கருத்துக்கள் ஆலிம்பெருமக்களால் பதிவு செய்யப்பட்டன. சில கேள்விகளும் முன்வைக்கப்பட்டன.
# வடமாநிலங்களில் வகுப்புவாதிகளின் வளர்ச்சிக்கு என்ன காரணம் முஸ்லிம்கள் விழிப்புணர்வற்று இருக்கின்றார்களா...?
பதில் அளித்த தேசிய துணை தலைவர் அவர்கள் இது போன்ற கலந்துரையாடல்கள் உங்களுக்குள் வாய்ப்புள்ள இடங்களில் மாதத்திற்கு ஒரு முறை இரண்டு மாதத்திற்கு ஒரு முறையோ நடைபெறுகின்ற பொழுது இன்னும் அதிக அளவில் நாம் செய்திகளை பரிமாறிக் கொள்ளலாம்.
அத்துடன்...
வகுப்புவாதிகள் வட மாநிலங்களில் பெரு வளர்ச்சியை பெற்று இருக்கிறார்கள் என்பதற்கு முஸ்லிம்கள் விழிப்புணர்வு இல்லாமல் இருக்கின்றார்கள் என்பது காரணம் அல்ல... முஸ்லிம்களை பூச்சாண்டி காட்டி வகுப்புவாதிகள் இந்துக்கள் ஓட்டு வங்கியை உருவாக்கி இருப்பது தான் அடிப்படை காரணம். அதைத் தாண்டியும் பல்வேறு வகைகளில் முஸ்லிம்கள் அரசியல் ரீதியாகவும் அறிவார்ந்த முறையிலும் பல்வேறு களப்பணிகளை செய்து வருகிறார்கள் அலட்சியமாகவோ கவர்மற்றோ இல்லை என்பதை மிகவும் சிறப்பாக விளக்கினார்.
முஹம்மதுது பூரா மஸ்ஜிதின் தலைமை இமாம் மௌலவி முஹம்மது ஷரீஃப் யூசுஃபி அவர்களின் துஆவோடு கூட்டம் நிறைவுற்றது.