News Channel

இல்ல திருமண விழாவில் புத்தக அரங்கம்

திருப்பூரில் இஸ்லாமிய சமூகத்தின் அந்தஸ்து மிக்க ஆளுமை ஒருவரின் இல்ல திருமணத்தில் புத்தகங்களை படிக்க ஆர்வம் புகட்டும் விதமாக பல்வேறு நூல்களை கொண்ட ஸ்டால் அமைக்கப்பட்டிருந்தது, 
இதில் திருப்பூரில் அமைந்துள்ள ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பிற்கும் புத்தக ஸ்டால் அமைக்க அழைப்பு விடப்பட்டிருந்தது.
 அதன் அடிப்படையில் திருமணவிழாவில் IFT புத்தகம் காட்சி படுத்தப்பட்டது. 
திருமணத்திற்கு வந்த ஏராளமான மக்கள் புத்தகத்தை வாங்கி சென்றனர். 
இஸ்லாம் பற்றிய அழைப்பு மக்களிடத்தில் கூறப்பட்டது ஆர்வமாக இஸ்லாம் குறித்த நிலைபாட்டினை அறிந்து கொண்டார்கள், 
மேலும் ஆலிம்க்ள், உலமாக்கள் கலந்து கொண்டனர். 
இவற்றில் பொதுமக்களுக்கு திருக்குர்ஆன் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.