News Channel

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அகில இந்திய துணைத் தலைவர் சென்னையில் சிறப்புக் கூட்டம்

சென்னை: ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் அகில இந்திய துணைத் தலைவர் பேராசிரியர் முஹம்மது சலீம் சாஹிப் அவர்களின் சென்னை வருகையை ஒட்டி, சென்னை மெட்ரோ சார்பாக ஒருசிறப்புக் கூட்டம்29.08.2025 அன்று மாலை நடத்தப்பட்டது.
இக்கூட்டத்திற்கு அமீரே ஹல்கா (மாநிலத் தலைவர்) மௌலவி முஹம்மது ஹனீபா அவர்கள் தலைமை தாங்கினார். 
சென்னை மெட்ரோவின் நாஜிம் (நிர்வாகி) அத்தாவுல்லா அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.
கூட்டத்தில் சிறப்புரையாற்றிய பேராசிரியர் முஹம்மது சலீம் சாஹிப் அவர்கள், 
சமகால சமூக மற்றும் ஆன்மிகச் சவால்கள் குறித்து விரிவாகப் பேசினார்.
அவரது உரைக்குப் பின், பங்கேற்பாளர்களால் எழுப்பப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். 
கேள்வி-பதில் பகுதி, பொதுமக்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியது.
நிகழ்ச்சியின் நிறைவில், ஜமாஅத் அமைப்புச் செயலாளர் ஜலாலுத்தீன் மற்றும் சென்னை மெட்ரோவின் ஆலோசனைக் குழு உறுப்பினர் இம்ரான் லத்தீப் சேட் ஆகியோர் நன்றி உரை வழங்கினர்.
இந்த நிகழ்ச்சி, சென்னையில் உள்ள ஜமாஅத்தின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களிடையே மிகுந்த எழுச்சியை ஏற்படுத்தியது.