News Channel

PRESS RELEASE

மே 1 – உழைப்பாளர் தினம்: 
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மாநிலத் தலைவர் மௌலவி A.முஹம்மது ஹனீபா மன்பயீ அவர்களின் வாழ்த்துச் செய்தி

சென்னை: 
உலகம் முழுவதும் மே 1 ஆம் தேதி கடைப்பிடிக்கப்படும் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு, 

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மாநிலத் தலைவர் மௌலவி A.முஹம்மது ஹனீபா மன்பயீ அவர்கள் தனது வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார்.

அவர் தனது செய்தியில் கூறியதாவது:

“உழைப்பே மனித வாழ்வின் அடித்தளம். ஒவ்வொரு தொழிலாளரும் சமூகத்தின் முன்னேற்றத்திற்கு அளிக்கும் பங்களிப்பு அளப்பரியது. 

இஸ்லாம்
உழைப்பை உயர்ந்த பண்பாகக் கருதி, 
தன் கைகளால் உழைத்து நேர்மையாக வாழ்வாதாரம் ஈட்டுவதை  மிக உயர்ந்த நிலைக்கு உயர்த்துகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், 
ஒருவர் தன் உழைப்பால் சம்பாதிப்பதே சிறந்த வருமானம் என்று கூறி உழைப்பின் பெருமையை எடுத்துரைத்துள்ளனர்.

உழைப்பாளியின் வியர்வை உலர்வதற்கு முன் கூலியை கொடுத்து விடுங்கள் என்றும் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறியுள்ளார்கள்.

உழைப்பாளர்கள் அனைவரையும்  மரியாதையுடனும் மனித நேயத்துடனும் நடத்த வேண்டும் என்றும் 
இஸ்லாம் வலியுறுத்துகிறது.

இன்றைய சூழலில் பல தொழிலாளர்கள் உலகம் முழுவதும் இன்னும் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வரும் நிலையில், 
அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவது காலத்தின்தேவை. 

சமத்துவமும் 
சமூக நீதியும் நிலைநாட்டப்பட வேண்டும்.

உழைப்பாளர்களும் தங்கள் பணி சார்ந்த 
கடமையை சரிவர நிறைவேற்ற முழு முயற்சிகள் செய்ய வேண்டும்.

இந்த உழைப்பாளர் தினத்தில், அனைத்து தொழிலாளர்களுக்கும் என் இதயம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதுடன், 
அவர்கள் கண்ணியமான வாழ்க்கையை வாழ சமூகமும்,அரசும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

வெளியீடு:
ஊடகத்துறை 
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழ்நாடு&புதுச்சேரி