08 நவம்பர் 2024
பத்திரிக்கை செய்தி
அலீகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் சிறுபான்மை அந்தஸ்தை உறுதி செய்யும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம்: சையத் சஆததுல்லாஹ் ஹுசைனி, தலைவர் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் (JIH)
புதுதில்லி: அலீகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் (AMU) சிறுபான்மை அந்தஸ்தை நிலைநிறுத்தும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் (JIH) தலைவர் சையத் சஆததுல்லாஹ் ஹுசைனி வரவேற்றுள்ளார்.
1967 ஆம் ஆண்டு எஸ். அஜீஸ் பாஷாவுக்கு எதிராக
யூனியன் ஆஃப் இந்தியா மீதான தீர்ப்பை நிராகரித்ததன் மூலம், ஒரு சட்டத்தால் உருவாக்கப்பட்ட ஒரு நிறுவனம் சிறுபான்மை நிறுவனமாக உரிமை கோர முடியாது என்று கூறியது,
உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு ஆயிரக்கணக்கான சிறுபான்மை கல்வி நிறுவனங்களின் உரிமைகளை பாதுகாக்கும் ஒரு முக்கியத் தீர்ப்பாக வழங்கியது.
இது இந்திய அரசியல் சட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட சவால்களை எதிர்கொள்ளக்கூடிய மற்றும் அரசியலமைப்பில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து மத, மொழி மற்றும் கலாச்சார சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாக்க வழிவகுக்கும்.
SC இன் அரசியலமைப்பு பெஞ்ச் இந்த வழக்கில் "யாரால் "பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது, அதன் முதன்மையான மூளையாக யார் இருந்தார்கள் என்பதை" மற்றொரு பெஞ்ச்சை விசாரிக்க வேண்டும் என மாற்றியதால், AMU இன் சிறுபான்மை அந்தஸ்து நீதிமன்றத்தால் பாதுகாக்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்.
அலீகர் முஸ்லிம் பல்கலைக் கழகத்தை (AMU), சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தின் கல்வி மேம்பாட்டிற்காக "சர் சையத் அகமது கான்" அவர்களால் நிறுவப்பட்டது என்பது மறுக்க முடியாத வரலாறு.
சையத் சஆததுல்லாஹ் கூறுகையில், இந்தியாவின் முக்கியமான அங்கமாக முஸ்லிம் சமூகத்தினரை, அரசாங்கமும் உள்ளூராட்சியும் நிறுவனங்களும் அறிந்து அவர்களின் கல்வி, வாழ்க்கைத் துறை, பாதுகாப்பு போன்ற அடிப்படை உரிமைகளை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதையே நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
இந்தியா முஸ்லிம்கள் தேசத்திற்கு எல்லா நேரமும் நேர்மறையான பங்களிப்பையே செய்துள்ளார்கள், மேலும் அவர்களின் கல்வி நிறுவனங்கள் சாதி, மத பாகுபாடு இல்லாமல் மாணவர்களுக்கு சேவை செய்கின்றன, எனவே சிறுபான்மையினர் எப்போதும் நீதிமன்றத்தை அணுக வேண்டிய நிலையை அரசாங்கம் மாற்ற வேண்டும்.
சிறுபான்மையினர் வளர்ச்சித் திட்டங்களை அவர்களுக்கு அடையாளம் காட்டி, அரசு எந்த பாரபட்சத்தையும் எதிர்கொள்ளாமல் அவர்களை பங்கேற்க செய்ய வேண்டும். இதில் அவர்களின் நிறுவனங்களைப் பாதுகாத்தல் மற்றும் அவர்களுக்குத் தேவையான சலுகைகளை வழங்குதல், உறுதியான செயல்களை நடைமுறைப்படுத்துதல் மற்றும் அவர்களின் வீழ்ச்சியடைந்து வரும் சமூக-பொருளாதார நிலையை மேம்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் உள்ளடங்கும். இது எந்த ஒரு ஜனநாயக நாட்டிற்க்கும் அத்தியாவசியமான ஒன்று.
வழங்கியவர்:
சல்மான் அஹ்மத்
தேசிய உதவிச் செயலாளர்,
ஊடகத் துறை,
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்,
புது தில்லி -