RIFA உச்சி மாநாடு
ரிஃபா சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரீஸ் மகிழ்ச்சியுடன் அறிவிப்பதாவது:
ரிஃபா 2026 ம்ஆண்டு உச்சி மாநாடு சென்னையில் 16-05-2026 அன்று நடைபெறவுள்ளது.
தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 400 முதல் 500 வரையிலான ரிஃபா உறுப்பினர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளனர்.
19.04.2026 அன்று
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மாநிலத் தலைவர்
மௌலவி A.முஹம்மது ஹனிபா மன்பயீ,
மாநிலத் துணைத் தலைவர்
ஜனாப் ஐ. ஜலாலுதீன், சென்னை மெட்ரோ தலைவர்
ஜனாப் நசீர் அத்தாவுல்லாஹ் ஆகியோர் முன்னிலையில் மாநாட்டின் அதிகாரப்பூர்வ லோகோ வெளியிடப்பட்டது.
ரிஃபா
2026ஆண்டு உச்சி மாநாடு -ன் முக்கிய நோக்கம்,
தமிழ்நாடு முழுவதும் ரிஃபாவை அடுத்த கட்டத்திற்கு உயர்த்துவதாகும்.
வணிக சமூகத்தினரிடையே வலுவான தொடர்புகளை ஏற்படுத்தி,
மதிப்பு சார்ந்த ஒத்துழைப்பை உருவாக்குவதன் மூலம், தனிப்பட்ட வணிக வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல், மாநிலத்தின் வளர்ச்சிக்கும், தேசத்தின் கட்டமைப்புக்கும் பங்களிப்பதே இதன் நோக்கமாகும்.
இன்ஷா அல்லாஹ், இஸ்லாமிய நெறிகளையும் நீதியான கொள்கைகளையும் கடைப்பிடித்து, சமூகத்தில் நல்ல பொருளாதாரத் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு முக்கிய நிகழ்வாக இந்த மாநாட்டை நடத்திட நாங்கள் விரும்புகிறோம்.
இந்த உச்சி மாநாடு வெற்றிகரமாக நடைபெற்று, தமிழ்நாட்டு வணிக உலகில் நேர்மறையான மாற்றத்திற்கான உந்து சக்தியாக அமைய வேண்டுமென்று பிரார்த்திக்கிறோம்.
யூனுஸ் சேட்.
மாநிலத் தலைவர் - தமிழ்நாடு
ரிஃபா சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரீஸ்