"பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு"
"திருப்பூர்"
4.9.2024 இன்று
மாலை 6 மணியளவில்
"ஒழுக்கமே சுதந்திரம்"
அகில இந்திய பரப்புரையின் ஒரு பகுதியாக
திருப்பூர் வருகை புரிந்த ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர் அணி
தேசிய துணைச் செயலாளர் சகோதரி ராபியா பஸரி&
மாநில மக்கள் தொடர்பு செயலாளர்
சகோதரி H. சாஜிதா பேகம்
அவர்கள் தலைமையில்
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர் அணி சார்பாக பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது
ஒழுக்கமே சுதந்திரம் பரப்புரையின் நோக்கம்,
அதன் அவசியம் குறித்தும் அதில்
ஜமாத் இஸ்லாமி ஹிந்த் மகளிர் அணி முன்னெடுத்து செய்யும் இந்த பரப்புரை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்றும்
ஒழுக்க விழுமங்களை மனித சமூகம் பேணி நடக்கும் வரை அமைதியான வாழ்க்கை அமையும்
ஒழுக்கமற்ற செயல்களை மனிதகுலம் செய்யத் தொடங்குமேயானால்
நவீனம் என்ற பெயரில் ஒழுக்கம் கெட்ட செயல்களை ஆதரிக்க தொடங்கினால் மனித விழுமியங்கள் வீழுந்து விடும்.
ஆகவே ஒழுக்கமே சுதந்திரம் என்ற மகத்தான குரல் முழக்கத்துடன்
பரப்புரையை நாங்கள் அகில இந்திய அளவில் நடத்தி வருகிறோம் என்று தனது பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறினார்.
இப்பத்திரிக்கையாளர் சந்திப்பில் மகளிர் அணி திருப்பூர் மாநகர பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள்.
தகவல்: JIH Tirupur Media team