News Channel

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பாக கோவையின் பல்வேறு இடங்களில் சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் நடைபெற்றது.

ஜமாஅத்தின் சார்பாக கோவை மாநகர் உள்ள பள்ளிவாசல்களில் இந்திய நாட்டின் 78வது சுதந்திர தினம் மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டது.

கோவை கரும்புக்கடை காந்தி நகர் கிளையின் சார்பாக கொடியேற்ற நிகழ்வு காந்தி நகர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் முன்னாள் தமிழ்நாடு தலைவர் ஜனாப். சபீர் அஹமது சாஹிப் அவர்கள் கொடியேற்றி சிறப்பித்தார்.

கோவை குனியமுத்தூர் ஹிரா மஸ்ஜித் சார்பாக பள்ளிவாசலில் கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை பெருநகர் தலைவர் ஜனாப். P.S. உமர் ஃபாரூக் அவர்கள் கொடியேற்றி சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

மேலும் கோவை ஜி.எம் நகர் பகுதியில் மஸ்ஜிதுல் கவ்ஸர் பள்ளிவாசலில் கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை மக்கள் தொடர்புச் செயலாளர் ஜனாப்.அப்துல் ஹக்கீம் அவர்கள் கொடியேற்றி சிறப்புரை நிகழ்த்தினார்.

கோவை வெள்ளலூர் பகுதி மஸ்ஜிதுல் முஹாஜிரீன் பள்ளிவாசலில் சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை கிழக்கு மண்டல தலைவர் ஆசிரியர். சலீம் அவர்கள் கொடியேற்றி சிறப்புரை நிகழ்த்தினார்கள். விழாவில் மதீனத்துல் உலூம் மதரஸா மாணவர்கள் சுதந்திரப் போராட்ட வீரர்கள் போன்று வேடமணிந்து விழாவில் கலைநிகழ்ச்சிகள் நடத்தினர்.

சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் மதீனத்துல் உலூம் மதராஸா மாணவர்கள், முஹல்லாவாசிகள், முக்கிய பிரமுகர்கள் என அனைத்து சமுதாய மக்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். அல்ஹம்துலில்லாஹ்.