எல்லாம் வல்ல இறைவனை சாந்தியும் சமாதானமும் அவனது அனைத்து படைப்பினங்களின் மீதும் ஏற்பட்டுவதாக
ஜூலை 05.08.24 திங்கள் கிழமை மாலை 6:30 மணியிலிருந்து 8.30 மணி வரை மணப்பாறை தக்வா பள்ளியின் அருகில் வசிக்கும் கரிக்காண்குளம் பகுதியில் உள்ள அருவி மகளிர் சுய உதவிக்கு இரண்டாம் ஆண்டு நிறைவு விழாவில் ஜமாஅத்தின் தலைவர் நிர்வாகிகள் கலந்து கொள்ள அழைத்தனர்.
அவர்களது நிகழ்ச்சியை பள்ளிவாசலில் நடத்த அவர்களுக்கு வழிகாட்டி சிறப்பாக நடந்தேறியது. நிகழ்வில் JIH மணப்பாறை கிளையின் தலைவர் ஜபருல்லா மற்றும் தக்வா பள்ளியின் செயலாளர் காதர் பாஷா பள்ளிவாசலின் இமாம் மற்றும் JIH உறுப்பினருமான மௌலவி ஜாபர் உசேன் அவர்களும் கலந்து கொண்டனர்.
அதில் அவர்களுக்கு இஸ்லாத்திற்கு பெண்களுக்கு அளிக்கப்படும் உரிமைகள் மற்றும் சலுகைகள் பற்றியும் பொருளாதார சமத்துவம் மற்றும் சமுதாயத்தின் பிரச்சினைகளை தீர்ப்பதில் வழிபாட்டுத் தலங்களில் பொறுப்பு என்ன என்பதையும் பிறப்பால் புறந்தல்லுவதும் அனுமதி மறுப்பும் இஸ்லாத்தில் இல்லை என்பதையும் இன்னும் மக்கள் சேவையை மகேசன் சேவை என்று இஸ்லாம் போதிப்பதால்தான் சாதி மதம் பாராமல் ஆபத்து காலங்களில் பள்ளிவாசல்கள் ஆதரவு அனைவருக்கும் கிடைக்கின்றது.
எந்த உயர் ஜாதி ஆனாலும் உயிர் அவன் உடலை விட்டுப் போனால் அந்த கோவிலில் தீட்டு என்று உள்ளே அனுமதிப்பதில்லை ஆனால் இஸ்லாம் வழிபாட்டு தளத்தில் வைத்து அவருக்காக பிரார்த்தனை நடத்தி கண்ணியமாக அடக்கம் செய்கின்றது பிறப்பால் ஒரு சாரருக்கு அனுமதியும் மற்றொரு சரருக்கு அனுமதி மறுப்பதும் இங்கு இல்லை என்பதையும் நாம் அனைவரும் ஒரே தாய் தந்தையறிடமிருந்து பிறந்தவர்கள் நாம் அனைவரும் சகோதர சகோதரி என்பதையும் அதை உணராமல் முஸ்லிம்களே பேசினாலும் அது இஸ்லாம் குறித்த அறியாமையால் தான் என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும் என்ற பல கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் விடை அளிக்கப்பட்டது.
இறையருளால் குறித்த நேரத்தில் நிகழ்ச்சி இனிதே முடிவுற்றது.