News Channel

புதுச்சேரி JIH சார்பாக

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் புதுச்சேரி தெற்கு வட்டம்
 சமூக சேவை பிரிவு சார்பாக
 C.M.அஷ்ரப் அரசு தொடக்கப்பள்ளிக்கூடத்திற்கு மாணவர்களின் வளர்ச்சிக்காகவும் 
Smart வகுப்பிற்க்காகவும் "Smart LED TV" அன்பளிப்பாக வழங்கப்பட்டது. 
 இந்நிகழ்வில் உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்,

 பள்ளியின் தலைமை ஆசிரியர் N.வெங்கடேசன் அவர்கள் 
அனைவரையும் வரவேற்று சிறப்புடன் பேசினார்,
 நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் திரளாக கலந்துகொண்டனர், 
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் புதுச்சேரி தெற்கு மற்றும் வடக்கு வட்ட பொறுப்பாளர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்,
 நிகழ்ச்சியில் சகோதரர் அன்வர் அலி ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் சமூக சேவை மற்றும் தங்களின் பங்களிப்பை பற்றியும் சிற்றுரை ஆற்றினார், 
 இறுதியாக பள்ளி மாணவர் ரிஷி நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவுபெற்றது.