News Channel

ஆலிம்கள் சந்திப்பு நிகழ்ச்சி

ஆலிம்கள் சந்திப்பு நிகழ்ச்சி

இராமநாதபுரம் தீன் நகரில் ஆலிம்கள் உலமா பெருமக்கள் சந்திப்பு நிகழ்ச்சி இராமநாதபுரம் மற்றும் அருகிலுள்ள பகுதியின் இமாம்களை ஒருங்கிணைத்து இமாம்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்த வேண்டும் என முன்னதாக முடிவு செய்யப்பட்டிருந்தது.

அவ்வகையில், செவ்வாய்க்கிழமை 23.07.2024 அன்று காலை 10:00 மணி முதல் மதியம் 12: 30 வரை தீன் நகரிலுள்ள ஜும்ஆ பள்ளிவாசல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இந்நிகழ்விற்கு

* இராமநாதபுரம் 
* தேவிபட்டினம்
* சிக்கல்

போன்ற பகுதியிலிருந்து சுமார் 35 க்கும் மேற்பட்ட இமாம்கள் கலந்து கொண்டார்கள். 
நிகழ்ச்சியின் 
சிறப்பு விருந்தினராக "ராபிதத்துல்  உலமா மாநிலச் செயலாளர் அஹமது முஹைதீன் ஃபைஜி" அவர்களும் "ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த மாநிலச் செயலாளர்  மெளலவி  முஹையிதீன் குட்டி உமரி அவர்களும் கலந்து கொண்டார்கள். 

"ராபிதத்துல்  உலமா மாநிலச் செயலாளர் அஹமது முஹைதீன் ஃபைஜி" அவர்கள் பேசுகையில்....
* ராபித்தத்துல் உலமாவின் நோக்கம் 
* அதன் எதிர்பார்ப்பு
* நடைபெறுகின்ற பணிகள் 
*  தற்போது, பொதுவான இமாம்கள் நிலை
* இமாம்களுக்கு இருக்கும் பொறுப்பு 
* தற்போது சமுகத்தின் அவல நிலை
* அதை களைவதற்கு கான கூட்டு முயற்சிகள்

போன்ற செய்திகளை எடுத்துக் கூறினார். மேலும், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் குறித்தும் அறிமுகம் செய்யப்பட்டது.

சிறப்புரைக்கு பின்பு கலந்துரையாடலும்,
அதனைத் தொடர்ந்து கேள்வி - பதிலும் நடைபெற்றன.

இந்த நிகழ்ச்சியில் மெளலவி  முஹையிதீன் குட்டி உமரி  (ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த மாநிலச் செயலாளர்) அவர்கள் தலைமை தாங்கினார்.

அஹ்மத் இப்ராஹீம் மஸ்லஹி ஹஜரத் ( பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் இராமநாதபுரம்) அவர்கள் 
முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியின் துவக்கமாக  ஜாஃபர் சாதிக் மன்பயீ 
( தீன் நகர் ஜும்ஆ பள்ளிவாசல் இமாம்) அவர்கள் கிராத் ஓதி துவக்கி வைத்தார் 

முஹம்மது ரஃபீக் தாஃவதி  (இமாம், மதினா நகர், சிக்கல்.)
வரவேற்புரை நிகழ்த்தினார்.

அஹமது முஹைதீன் ஃபைஜி 
(ராபிதத்துல்  உலமா மாநிலச் செயலாளர்)
அவர்கள் சிறப்புரை ஆற்றினார் 

மெளலவி ஆதம் அலி ஃபைஜி 
(இமாம்,  ஓடைகுளம், சிக்கல்) அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.


நிகழ்ச்சியின் இறுதியில் இமாம்கள் தங்களிடம் இருக்கின்ற சந்தேகங்களை கேள்விகளாக கேட்டறிந்தார்கள். அதற்க்கான விளக்கமும் அவர்களுக்கு அளிக்கப்பட்டது.

வருகை தந்த இமாம்களுக்கு தேனீர் விருந்தும், அதனைத்தொடர்ந்து மதிய உணவு விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டது.

இறுதியாக, மெளலவி  
முஹம்மது ரஃபீக் உலவி (இமாம் இராமநாதபுரம்) இவர்களின் துஆவோடு நிகழ்ச்சி நிறைவு பெற்றது.