ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கும்பகோணம் கிளை சார்பாக 20.07.2024 சனிக்கிழமை அன்று காலை 11 மணி அளவில் கும்பகோணம் சத்திய சோலை அரங்கத்தில் பள்ளிவாசல் நிர்வாகிகள் ஓர் கலந்துரையாடல் என்ற நிகழ்ச்சி கும்பகோணம் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கிளை தலைவர் அப்துல் கலாம் ஆசாத் அவர்களின் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது.
கும்பகோணம் கிளைச் செயலாளர் சகோதரர் முகமது ரியாஸ் நிகழ்ச்சியை வழிநடத்தி சென்றார்.
வரவேற்புரை சகோதரர். ஹாஜா மாலிக் அவர்கள் உரையாற்றி பின்பு துவக்க உரையாக சகோதரர் முகமது யூனுஸ் மாவட்ட அமைப்பாளர் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தொகுத்து வழங்கினார்கள்.
பள்ளிவாசல் நிர்வாகிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்காக கோயம்புத்தூர் ஹிதாய மகளிர் அரபிக் கல்லூரி தாளாளர் மௌலவி முகமது இஸ்மாயில் இம்ததாதி அவர்கள் வருகை புரிந்து பள்ளிவாசல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் காலத்தில் எப்படி செயல்பட்டது தற்போது எப்படி செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. பள்ளிவாசல் நிர்வாகிகள் தற்போதைய பள்ளிவாசலை எப்படி கொண்டு செல்ல வேண்டும் என்கின்ற எட்டு யோசனைகளை கூறினார்கள். பள்ளிவாசலுக்கான கொள்கையை வகுப்பது, அனைத்து விஷயங்களையும் ஆலோசனை செய்யும் இடமாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் காலத்தில் பயன்படுத்தியது போல பயன்படுத்துவது, பைத்துல் மால் ஏற்பாடு செய்து நடத்துவது, சிறிய அளவிலான மெடிக்கல் ஏற்படுத்துவது என்று பல ஆலோசனைகளை கொடுத்தார்கள்.
இறுதியாக பள்ளிவாசல் நிர்வாகிகளின் கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்டு நிகழ்ச்சி மதிய உணவு உடன் நிறைவு பெற்றது.
இந்த நிகழ்ச்சியில் 30 பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் 20 முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டார்கள்.