ஊழியர்களுக்கான சிறப்பு இரவு தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது. ரமலான் மாதத்தில் கடைசி பத்தில் ஒற்றைப்படைகளில் ஊழியர்களுக்கான இரவு தர்பியா நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இராமநாதபுரம் பகுதியில் உள்ள அனைத்து ஊழியர்களையும் ஒருங்கிணைத்து ரமலான் நகர் ஜும்மா பள்ளிவாசலில் கடந்த 5/4/ 2024 வெள்ளிக்கிழமை இரவு சிறப்பு தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக தமிழக ஜமாத்அத்தே இஸ்லாமி ஹிந்த் மாநில தலைவர் மௌலவி ஹனிபா மண்பஈ அவர்களும், JIH- மாநில செயலாளர் மௌலவி முஹைதீன் குட்டி உமரி அவர்களும் வருகை புரிந்தார்கள். இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம், சிக்கல் ஆகிய பகுதிகளில் இருந்து ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் ஊழியர்கள் இமாம்களாக பணி செய்யக்கூடிய இயக்க தோழர்களை ஒன்றிணைத்து நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சி சரியாக இரவு 11 மணி அளவில் துவங்கி ஷஹர் வரை நீடித்தனர். இந்த நிகழ்ச்சியினை இஸ்லாமிக் சென்டர் துணைச்செயலாளர் ஜனாப் நஜீர் ஹுசைன் அவர்கள் தலைமை ஏற்று நடத்திக் கொடுத்தார்கள்.
இந்நிகழ்வில் ஊழியர்களுக்கு மிகத் தெளிவாக நமது லட்சியமும் யூசுப் நபியும் என்கின்ற மையக்கருத்தில குர்ஆன் கூட்டாய்வு மிக ஆழமாக நடைபெற்றது. ஒரு இயக்க ஊழியர் உறுப்பினர் தன்னுடைய வாழ்வில் எந்த நிலையிலும், எச்சூழ்நிலையிலும் மக்கள் கருத்தை இஸ்லாத்திற்கு சாதகமாக மாற்றி அமைக்கக்கூடிய இந்த மிஷினை நாம் மேற்கொள்ள வேண்டும். அதை மேற்கோள் காட்டுவதற்கு எடுத்துக் கொண்ட வரலாறு தான் நபி யூசுப் அலைஹிஸ்ஸலாம்
👉அவர்களுடைய வாழ்வில் நடந்த ஒவ்வொரு நிகழ்வையும்
👉அவர்கள் தங்களுடைய வாழ்வில் சந்தித்த ஒவ்வொரு பிரச்சனைகளையும்
👉அவர் தங்கள் வாழ்வில் அவருக்கு ஏற்பட்ட இன்னல்களையும் எப்படி தங்களுடைய மிஷன்காக செயல்பட்டார்கள்
👉அதேபோல தங்களுடைய வாழ்வில் ஏற்பட்ட ஒவ்வொரு சூழ்நிலைகளும் அவர்கள் நடந்து கொண்ட விதம்
👉அவர்கள் தன்னிடம் உருவாகிக் கொண்ட செயல்பாடுகள்
👉அவர்கள் தங்களுடைய வாழ்வில் ஏற்பட்ட நெருக்கடியான நிலையிலும் கூட பணிகள் புரிந்த நிபுணத்துவம்
👉தூர சிந்தனை
👉அர்ப்பணிப்பு
👉பொறுமை
👉சகிப்புத்தன்மை
ஆகியவைகளை கையாண்ட விதத்தை மிஷனோடு ஒப்பிட்டு மிகச் சிறப்பான முறையில் வருகை புரிந்த மாநில தலைவர் அவர்களும் செயலாளர் அவர்களும் அற்புதமான விதத்தில் கூட்ட ஆய்வுகள் மூலமாக செய்திகளை விளக்கிக் காண்பித்தார்கள் .
இந்த உலகத்தில் தனக்கு பிடித்த நபர்கள் ஏதாவது ஒன்றை நாம்மிடம் கேட்டால். அதை அவர்களுக்கு நிறைவேற்றுவதில் ஒரு மனிதன் அதை நிறைவேற்றுவதில் எவ்வளவு ஆர்வமும், ஆசையும் இருக்கும்.
தன் பிரியமானவர்களின் அந்த ஆசையை அவன்
📌அவர்கள் விரும்பியதை
📌அவர்களுடைய இலக்கை நிறைவேற்றி தருவதில் ஒரு மனிதன் துடிதுடிப்போடு ஆர்வத்தோடு அக்கறையோடு எதிர்பார்ப்போடு செயல்படுவானோ ! அதேபோலத்தான் இந்த பூமியில் இந்த நான்காண்டு செயல் திட்டத்தின் மிஷனாக இருக்கக்கூடிய மக்கள் கருத்தை இஸ்லாத்திற்கு சாதகமாக மாற்றி அமைக்கக்கூடிய பணியை ஒவ்வொரு உறுப்பினரும் ஊழியரும் தன்னுடையதாக
தனக்கு பிரியப்பட்டவர்களுக்கு செயல்படுத்தக்கூடிய காரியமாக எண்ணி செயல்பட வேண்டும் என்பதை இந்த வரலாறு மூலமாக மிகச் சிறப்பான முறையிலே எடுத்துரைத்தார்கள்.
இறுதியாக கியாமுல் லைல் (இரவு தொழுகையை) கூட்டாக நிறைவு செய்யப்பட்டது.
நிகழ்ச்சியின் இடையிலே தேநீர் விருந்துகளும் வழங்கப்பட்டன.
முடிவில் சிறப்பான முறையில் ரமலான் நகர் உள்ளூர் ஜமாத் மூலமாக ஸஹர் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பஜ்ர் தொழுகையோடு இந்த சிறப்பு இரவு தர்பியா நிகழ்ச்சி நிறைவடைந்தன.