News Channel

சமூக நல்லிணக்க நோன்பு துறப்பு சிறப்பு நிகழ்ச்சி

சமூக நல்லிணக்க நோன்பு திறப்பு நிகழ்ச்சி

சமூக நல்லிணக்க நோன்பு துறப்பு நிகழ்ச்சி இராமநாதபுரம் சிக்கல் பகுதியில் உள்ள மறவாய் குடியில் நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மாதத்தில் சகோதர சமுதாய மக்களிடத்தில் நல்லுறவை மேற்கொள்ளும் வகையில் பல நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. அவ்வகையில் இந்த ஆண்டும் ரமலான் மாதத்தில் சகோதர சமுதாய சொந்தங்களை அழைத்து நோன்பு துறப்பு நிகழ்ச்சி நடத்த முடிவு செய்யப்பட்டது‌ 
மறவாய்க்குடி முஸ்லிம் ஜமாத் சார்பாக உள்ளூர் மக்களான சகோதர சமுதாய மக்களை அழைத்து நிகழ்ச்சி நடத்தப்பட்டன. 
கடந்த 4/4/2024 அன்று மறவாய்குடி முஸ்லிம் ஜமாத் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட சமூக நல்லிணக்க நோன்பு துறப்பு நிகழ்ச்சிக்கு 
📌ஊராட்சி மன்ற தலைவர் 
📌கிராம அலுவலர் 
📌தொடக்கப்பள்ளி ஆசிரியர் 
📌உள்ளூர் தலைவர் 
📌ஊர் முக்கியஸ்தர்கள் என சகோதர சமுதாய சொந்தங்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சிறப்பித்தனர். 

இந்நிகழ்வில் சமூக நல்லிணக்கத்தை போற்றும் வகையில் மறவாய்குடி முஸ்லிம் ஜமாத் ஜும்மா பள்ளிவாசலின் இமாம் ஆலிம் ஷேக் முகமது தாஃவதி அவர்கள் சிறப்புரை ஆற்றினார். அவர் உரையில் கூறுகின்ற பொழுது இந்நிகழ்ச்சி என்பது நாம் வெறுமனே சந்திப்பதற்கான நிகழ்வல்ல நாம் ஒவ்வொரு நாளும் சந்தித்துக் கொண்டிருக்கின்றோம். இந்நிகழ்வின் மூலமாக நாம் ஒருவரை ஒருவர் முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும் இஸ்லாத்தை குறித்த தவறான கருத்து சுழன்று கொண்டிருக்கக்கூடிய இந்த காலத்தில் இஸ்லாத்தின் உண்மை தன்மையை உங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். இஸ்லாத்தில் உள்ள சிறப்புகளையும் இஸ்லாத்தை பின்பற்றக்கூடிய முஸ்லிம்களுடைய பண்பாடுகளையும், செயல்பாடுகளையும் குர்ஆன் எந்த அளவுக்கு அவர்களுக்கு வகுத்து தந்து இருக்கிறது என்பதை உங்களிடத்திலே எடுத்துக் கூறுவதற்காகவும். இன்னும் இந்த நோன்பின் மூலமாக சிறு குழந்தையிலிருந்து வயதானவர்கள் வரை கடைபிடிக்கக்கூடிய இந்த விரதம் ஏன் ? என்பதையும் இந்த நோன்பின் மூலமாக இறைவன் எப்படியான பயிற்சிகளை வழங்குகிறான் என்பதையும், முஸ்லிம்களிடத்தில் உள்ள செயல்பாடுகள் எந்த அடிப்படையில் உருவாகி இருக்கிறது என்பதையும் மிக அழகாக அவருடைய உரையில் எடுத்துக் கூறினார். 

வருகை புரிந்த மக்கள் உள்ளூர் முஸ்லிம் ஆண்கள் பெண்கள் இளைஞர்களோடு இணைந்து அவர்களும் நோன்பு துறந்தனர். மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு அவர்களுக்கு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது அதிலும் அவர்கள் கலந்து கொண்டு மனம் மகிழ்வோடு விடை பெற்று சென்றனர்.