News Channel

சமூக நல்லிணக்க நிகழ்ச்சி

ரமலான் மாதத்தில் அனைத்து முஸ்லிம்களும் நோன்பு நோற்பது கட்டாய கடமை .  ரமலான் மாதம் தொடங்கிய நாள் முதல் அனைத்து முஸ்லிம் சகோதரர்களும் சகோதரிகளும் நோன்பு நோற்று வந்து கொண்டிருக்கின்றனர் . மன்னார்குடி ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்
 இந்த நோன்பு காலத்தில் சமூக நல்லிணக்க நிகழ்ச்சியை பிற மத சகோதரர்களுடன் இணைந்து நடத்தி வந்து கொண்டிருக்கிறது .

அந்த நிகழ்ச்சியில்  இன்று நடந்த ஒரு  நிகழ்வு  நம் அனைவருக்கும் மகிழ்ச்சியையும் களப்பணியில் உத்வேகத்தையும் அளிப்பதாக இருந்தது…
வழக்கமாக நோன்பு நோற்கும் நமது சகோதரிகளைப் பார்த்து
 ஆர்வம் உந்தித்தள்ள சகோதர சமுதாயத்தைச் சேர்ந்த சகோதரிகள் நான்கு பேர் இன்று ஒரு நாள் நோன்பு நோற்று இருக்கிறார்கள்.
 நீங்கள் மட்டும்தான் நோன்பு நோற்பீர்களா நாங்களும் உங்களோடு சேர்ந்து ஒரு நாள் நோன்பு இருந்து பார்க்கிறோம் என்று நோன்பு நோற்றார்கள்.

 அவர்களுக்கு நோன்பு துறக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற நோக்கத்திலே இன்று மன்னார்குடி ஜமாத் இஸ்லாமி கிளை சார்பாக அவர்களுக்கு நோன்பு துறக்கும்  நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. அவர்களுடன் இணைந்து நாம் நடத்திய இஃப்தார் அமர்வு உள்ளங்களை நெகிழச்செய்வதாக உறவுகளை வலுப்படுத்தும் விதமாகவும் அமைந்தது.

அல்ஹம்துலில்லாஹ் …
எல்லா புகழும் இறைவனுக்கே