News Channel

நோன்பு துறக்கவும் மனம் திறக்கவும் சிறப்பு இஃப்தார் நிகழ்ச்சி.

நோன்பு திறக்கவும் மனம் திறக்கவும்...

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கிளையின் தர்மபுரி சார்பாக இதர மத சகோதரர்களுக்கான *இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி 18.03.2024 திங்கள் கிழமை அன்று ஜாலி டவர் அரங்க் கூட்டத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது..

துவக்கமாக இறைவசனம் மௌலவி சையத் கபீர்  அஹமத்  உமரீ ஓதினார்.
 அதன் தமிழாக்கத்தை சகோதரர் இம்ரான் படித்தார்.
சகோ மஸ்தான் வரவேற்புரை ஆற்றினார்.

இவ்விழாவிற்கு  சகோ முஹம்மத் அஷ்வாக் தலைமை தாங்கினார். தர்மபுரி மாவட்ட அனைத்து வணிகர் சங்கம்  தலைவர் திரு வைத்தியலிங்கம் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். 

சமரசம் பத்திரிகை பொறுப்பாசிரியர் V.S. முஹம்மத் அமீன் சிறப்புரை ஆற்றினார். 
பிறகு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

 சகோ ஜிப்ரான்  நன்றி உரையாற்றினார் அனைவருடனும் விருந்துபச்சாரம் உடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.

 நகரின் முக்கிய பிரமுகர்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஜமாஅத் உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்கள் மிக சிறப்பாக ஏற்பாடு செய்தனர் .