News Channel

நிர்மலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்களிடையே ஜமாஅத் மக்கள் தொடர்புச் செயலாளர் அவர்கள் கலந்துரையாடல்.

பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும், தேர்வை பயமில்லாமல் எதிர்கொள்ளவும் நிர்மலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வைத்து மாணவர்களுக்கு சிறப்பு நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை பெருநகர மக்கள் தொடர்புச் செயலாளர் ஜனாப்.அப்துல் ஹக்கீம் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

ஒவ்வொரு மாணவர்களும் தங்களுக்கென்று தனித்திறமைகளும், தனித்தன்மைகளும் கொண்டவர்கள். பள்ளி என்பது அந்த தனித் தன்மைகளையும், திறமைகளையும் வெளிப்படுத்த போதுமான களமாக அமைவதில்லை. ஆனால் நல்ல மதிப்பெண்களோடு நாம் விரும்பும் துறையை தேர்ந்தெடுத்து கல்லூரிகளுக்குள் நுழையும்போது நம்முடைய தனித்திறமைகளை வெளிப்படுத்தவும், மெருகேற்றவும், வளர்த்தெடுக்கவும் முடியும் என்று தன்னுடைய உரையில் அப்துல் ஹக்கீம் அவர்கள் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் முன்னூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். மேலும் நிகழ்வில் ஆசிரியர்கள் பலர் கலந்துகொண்டனர்.