News Channel

குடியரசு தின விழா கண்காட்சி



ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மதுரை மாநகர மகளிரணி, 
இஸ்லாமிய மாணவியர் அமைப்பு GIO மற்றும்
 குழந்தைகள் அணி CIO சார்பாக 75ஆம் ஆண்டு குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. 
இந்நிகழ்ச்சியில் துவக்கமாக ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மதுரை மாநகர மகளிரணி பொறுப்பாளர் ஜரீனா யூசுஃப் அவர்கள் தேசிய கொடியை ஏற்றினார். அதன் தொடர்ச்சியாக 'மனித நேயம் மலர' என்னும் தலைப்பில் கண்காட்சி நடைபெற்றது.
கண்காட்சியூனை மேன்மைமிகு மதுரை மாநகர  மேயர் இந்திராணி பொன்வசந்த் அவர்கள் துவங்கி வைத்து சிறப்பித்தார். 
மேலும் இந்நிகழ்ச்சியில் 50 கும் மேற்பட்ட மனித நேயத்தை வளர்ப்பதை குறித்தான கருத்தாக்க மாதிரிகளை(models) வைத்து GIO மாணவிகள் எடுத்துரைத்தனர். மேலும் இன மத பிரிவுகளின்றி அனைவரும் ஒற்றுமையாக மனித நேயத்துடன் இருக்க வேண்டும் என்ற கருப்பொருளில் குழந்தைகளின் நாடகம் மற்றும் மைம் நிகழ்ச்சி நடைபெற்றது. 
இந்நிகழ்ச்சியை பார்வையிட்ட மதுரை மாநகர மேயர் இந்திராணி பொன்வசந்த் அவர்கள் மனித நேயம் மலரட்டும் என்ற வாசகத்தை முழங்கினார்.
Feed back slip  ல் 'மனிக நேயம் மலரட்டும் 'என்று எழுதி கையெழுத்திட்டுக் கொடுத்தார்.
மேலும் மனித நேயம் குறித்தான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தமைக்கு வாழ்த்துகளை கூறினார். 
இந்நிகழ்ச்சியில் பெண்கள் மாணவிகள் குழந்தைகள் என ஐந்நூறுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று மகிழ்ந்தனர்.