News Channel

Kovai JIH ladies wing


பொங்கல் விழாவை முன்னிட்டு 

21/1/2024
மாலை 4 மணிய ளவில் 
கோவை பெருநகர சார்பாக

தொப்பம்பட்டியில்
சகோதர சங்கமம் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது 

சகோதரி பெனாசீர் அவரின் கிராஅத்துடன் 
துவங்கியது

சிறப்பு விருந்தினர்கள்

டாக்டர் ராதா 
ஆசிரியர் கிறிஸ்டி சாந்தி 
கவுன்சிலர் கவிதா

தலைமை உரை
கோவை பெருநகர செயலாளர்

 ராபிய பஷீர் 
பெண்கள் பற்றியும்
நம் ஜமாத் பற்றியும் மிக அழகான முறையில் எடுத்துக் கூறினார்

சிறப்புரை

மௌலவி இஸ்மாயில் இம்தாதி
மனித வளத்துறைச்
 செயலாளர் 
அவர்கள் மிக அழகான முறையில் எல்லா மக்களும் புரியிற மாதிரி
கதை நயத்துடன் நாம் அனைவரும் சகோதர சகோதரிகள் தான் என்று ஜாதி மதம் தாண்டி நாம் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்று அவரவர் கடவுள் அவரவருக்கு அடுத்தவர் கடவுளை பற்றி ஏசாதீர்கள் என்று குர்ஆன் வசனத்துடன் எடுத்துக் கூறினார் இதே மாதிரி ஒற்றுமையுடன் நிறைய ப்ரோக்ராம் நடத்தணும் என்று கூறினார்
பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரையும்
சிந்திக்க வைத்து 
 சிரிக்க வைத்து மகிழ்ச்சியாக்கினார் 

ஆசிரியர் கிறிஸ்டி சாந்தி அவர்கள்
இந்த மாதிரி ப்ரோக்ராம் ஒன்று கூடிய நம் ஜமாத்துக்கு நன்றி தெரிவித்தார் அனைத்து பிள்ளைகளையும் நல்ல படிக்க வைக்கணும் என்று கேட்டுக் கொண்டார்

இந்த நிகழ்ச்சிக்கு வந்தது ரொம்ப சந்தோசம் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்

இதே மாதிரி எங்க ஸ்கூலுக்கும் வாருங்கள் என்று கேட்டுக்கொண்டார்

டாக்டர் ராதா அவர்கள் இந்த ப்ரோக்ராம் வைத்ததற்கு ரொம்ப நன்றி தெரிவித்தார் நம் உடலையும் எக்ஸைஸ் மூலம் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று பெண்களுக்கு அறிவுரை வழங்கினார் தொப்பம்பட்டி மக்களுக்கு மருத்துவ கேம்ப் நடத்தலாம் என்று என்னிடம் கேட்டுக் கொண்டார் 

விளையாட்டுகள் நடத்தப்பட்டது பெரியவருக்கும் சிறியவர்க்கும் பரிசுகள் வழங்கப்பட்டது
சிறப்பு
 விருந்தினர்களுக்கு 
நினைவு பரிசும் உதயதாரை புக்கும் வழங்கப்பட்டது 

தேநீரும் பிஸ்கட்டுகள் விருந்துடன் நடத்தப்பட்டது

இறுதியாக
கோவை பெருநகர செயலாளர்
ஷர்மிளா அப்துல்லாஹ்
நிறைவுறை நிகழ்த்தினார்

பெரியவர்கள் 
50நபர்கள்
சிறியவர்கள்
12நபர்கள்
கலந்து கொண்டார்கள்