கோவை பெருநகரக் கிளையின் கீழ் இயங்கிவரும் மஸ்ஜிதுல் ஹுதா, மஸ்ஜிதுல் இஹ்ஸான், மஸ்ஜிதில் முஹாஜிரீன், மஸ்ஜிதுந் நூர், மஸ்ஜிதுல் கௌசர் & மஸ்ஜிதுல் ஹிரா ஆகிய 6 மஸ்ஜித்களின் புதிய பொறுப்பாளர்களுக்கான ஒருங்கிணைந்த கூட்டம் ஜனவரி 15 அன்று நடைபெற்றது.
மக்கள் கருத்தை மாற்றி அமைப்பது என்ற ஜமாஅத்தின் செயல்திட்டத்தின் அடிப்படையில் முன்மாதிரிப் பள்ளிவாசலை உருவாக்குவதற்காக தொடர் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதனடிப்படையில் கோவை பெருநகரக் கிளையின் கீழ் இயங்கி வரும் பள்ளிவாசலின் பொறுப்பாளர்களுக்கான கூட்டம் ஜனாப். மொய்தீன் (மஸ்ஜிதுல் கௌசர் மத்ரஸா பொறுப்பாளர்) அவர்களின் இறைவசனங்களுடன் நிகழ்ச்சி துவங்கியது.
முன்மாதிரிப் பள்ளிவாசல் இன்று சமூகத்தில் ஏற்படுத்தகூடிய தாக்கங்கள் என்ன? அதன் அவசியம் குறித்தும் பெருநகரத் தலைவர் ஜனாப். P.S. உமர் ஃபாரூக் அவர்கள் தலைமையுரை நிகழ்த்தினார்கள். தொடர்ந்து, பொறுப்பாளர்களின் பரஸ்பர அறிமுகமும் நடைபெற்றது.
ஜமாஅத் கோவை பெருநகர மனிதவளத்துறை செயலாளர் மௌலவி. முஹம்மது இஸ்மாயில் இம்தாதி அவர்கள் இலத்திரனியல் நிகழ்த்துகை (Power Point Presentation) மூலம் “மஸ்ஜித் நிர்வாகம்: முக்கியத்துவம், நோக்கம் & தாக்கம்..!” எனும் மையக்கருத்தில் சிறப்புரை நிகழ்த்தினார்கள். இதில் முன்மாதிரிப் பள்ளிவாசலை அமைப்பதின் செயல்முறைகள் குறித்து விரிவான வழிகாட்டுதல்களை வழங்கினார்.
இதனைத்தொடர்ந்து, நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. நிகழ்வை பெருநகரச் செயலாளர், ஜனாப். M.S. சபீர் அலி வழிநடத்தினார்.
எல்லாம் வல்ல அல்லாஹ், நமது பள்ளிவாசல்கள் முன்மாதிரிப் பள்ளிவாசல்கள் என்ற படித்தரத்தை அடைவதன் மூலம் நமது செயல்திட்டங்களை இலகுவாக நிறைவேற்றிட அருள்புரிவானாக. ஆமீன்.