போதை இல்லா தமிழகம் பரப்புரை ஆலிம்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி
19/09/2026 (07/ரபியுல் ஆகிர்/1448 ஹி) சனிக்கிழமை அன்று காலை 9.30 முதல் 1.15 மணி வரை
இராமநாதபுரம் ஜமாஅத்தே இஸ்லாமிய ஹிந்த் & ராபிததுல் உலமா கிளை சார்பாக
இராமநாதபுரம் - செய்யிதினா அபூபக்கர் சித்தீக் (ரலி) ஜும்ஆ பள்ளிவாசலில் நடைபெற்றது.
ஆரம்பமாக அஸ்ஸலாம் இஸ்லாமியக் கல்லூரியின் துணை முதல்வர், ராபிததுல் உலமாவின் மாநில செயலாளர்
மௌலவி ஆலிம் S. ஜாஃபர் சாதிக் மன்பஈ, பாஜில் ரஷாதி, அவர்கள் குர்ஆன் விரிவுரை நிகழ்த்தினார்கள்.
அதைத்தொடர்ந்து ஜமாஅத்தே இஸ்லாமிய ஹிந்தி (தமிழ்நாடு & பாண்டிச்சேரி) மாநில தலைவர் மௌலவி ஆலிம் M.A. முஹம்மது ஹனிபா மன்பஈ, பாஜில் அவர்கள் தலைமையுறை ஆற்றினார்கள்.
அதைத்தொடர்ந்து "மதுவின் தீமை குறித்தும் அதனை தடுப்பதற்கான வழிமுறைகள்" என்ற தலைப்புகளில் இராமநாதபுரம் வட்டாரத்தைச் சேர்ந்த ஆறு உலமாக்கள் உரையாற்றினார்கள்.
1) "போதையினால் ஏற்படும் விளைவுகள் அன்றும் இன்றும்" என்ற தலைப்பில் மௌலவி ஆலிம் ஆதம் அலி ஃபைஜி அவர்களும்,
2) "சட்டங்கள் மூலமே மதுவை ஒழிக்க முடியும்" என்ற தலைப்பில் மௌலவி ஆலிம் முஹம்மத் சித்தீக் சிராஜி அவர்களும்,
3) "தனிநபர் ஒழுக்கங்களின் மூலமே மதுவை ஒழிக்க முடியும்" எனும் தலைப்பில் மௌலவி ஆலிம் J.S.S. அலி பாதுஷா மன்பஈ அவர்களும்,
4) "விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மூலமே மதுவை ஒழிக்க முடியும்" எனும் தலைப்பில் தேவிபட்டினம் மௌலவி ஆலிம் S. முஹம்மத் யாஸீன் மன்பஈ அவர்களும்,
5) "மது அடிமைகளை புறக்கணிப்பதன் மூலமே மதுவை ஒழிக்க முடியும்" எனும் தலைப்பில் பனைக்குளம் மௌலவி ஆலிம் ஷேக் அப்துல்லாஹ் பாகவி அவர்களும்,
6) "தூய்மையான சமூக அமைப்பின் மூலமே மதுவை ஒழிக்க முடியும்" எனும் தலைப்பில் இராமநாதபுரம் வட்டார ஜமாஅதுல் உலமா சபை தலைவர் மௌலவி K. முஹம்மத் ரஃபீக் உலவி அவர்களும் உரையாற்றினார்கள்.
அடுத்து அஸ்ஸலாம் இஸ்லாமியக் கல்லூரியின் பேராசிரியரும், IFT யின் மொழிபெயர்ப்பாளருமான மௌலவி ஆலிம் முஹம்மது நூஹ் மஹ்ழரி அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.
இந்நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் 70-க்கும் அதிகமான ஆலிம்கள் கலந்து கொண்டார்கள்.
ராபிதாவின் உறுப்பினர்கள் மௌலவி ஆலிம் அலாவுதீன் உமரி,
மௌலவி ஆலிம் அபூபக்கர் தஃவத்தி, மௌலவி ஆலிம் ஜாஃபர் ஸாதிக் மன்பஈ, மௌலவி ஆலிம் ஷம்ஸுத்தீன் ஃபைஜி, வன்னிவயல் முஹம்மத் ஹஸன் தஃவத்தீ, சிக்கல் பகுதி இமாம்களான மௌலவி ஆலிம் ரஃபீக் தஃவத்தீ
மௌலவி ஆலிம் ஆதம் ஃபைஜி,
மௌலவி அப்துர்ரஹ்மான் தஃவத்தீ, மௌலவி ஷேக் தஃவத்தீ, இராமநாதபுரம் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் கிளைத் தலைவர் பொறியாளர் சிக்கந்தர் பாதுஷா அனைவர்களும் இணைந்து இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தினார்கள்.
எல்லாப் புகழும் இறைவனுக்கே !!!