News Channel

போதை இல்லா தமிழ்நாடு

Writing
போதை இல்லா தமிழ்நாடு – சட்டமன்ற உறுப்பினருடன் சந்திப்பு

திருப்பூர்:
“போதை இல்லா தமிழ்நாடு” பரப்புரை இயக்கத்தின் ஒரு பகுதியாக, திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் திரு. பாலமுருகன் அவர்களை, ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் – திருப்பூர் கிளைத் தலைவர் A. முகமது காசிம் தலைமையிலான குழுவினர் சந்தித்தனர்.

இச்சந்திப்பில் மகளிரணி பொறுப்பாளர் அம்சா பேகம் மற்றும் ஜமாஅத்தின் உறுப்பினர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சந்திப்பின்போது “போதை இல்லா தமிழ்நாடு” பரப்புரை இயக்கம் குறித்து சட்டமன்ற உறுப்பினருக்கு அறிமுகப்படுத்தப்பட்டதுடன், அதன் வாயிலாக மேற்கொள்ளப்படவுள்ள மக்கள் விழிப்புணர்வு பணிகள், பல்வேறு சமூக நடவடிக்கைகள் மற்றும் எதிர்கால முன்னெடுப்புகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
மேலும், போதைப் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கைகளில் தேவையான ஒத்துழைப்பை வழங்குவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

இம்முயற்சியை வரவேற்ற சட்டமன்ற உறுப்பினர் திரு. பாலமுருகன், தமது முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாகத் தெரிவித்தார். மேலும், படிப்படியாக போதை இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை தாமும் அரசும் தொடர்ந்து மேற்கொள்வதாகக் குறிப்பிட்டார்.
போதை இல்லாத சமூகத்தை உருவாக்குவதற்கான இந்த விழிப்புணர்வு முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் – திருப்பூர் கிளை தெரிவித்துள்ளது.