News Channel

மது போதைக்கு எதிரான பரப்புரை


ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கும்பகோணம் கிளையும், கும்பகோணம் வட்டார ஐக்கிய ஜமாஅத் அமைப்பும் இணைந்து நடத்தும் மதுவும் போதைக்கும் எதிரான பரப்புரையின் ஒரு பகுதியாக, ஐக்கிய ஜமாஅத் தலைவர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகளுக்கான சிறப்பு நிகழ்ச்சி 25.08.2026 அன்று கும்பகோணம் ஏ.பி. மஹால் திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் – கும்பகோணம் கிளைத் தலைவர் ஜனாப் அப்துல் கலாம் ஆசாத் அவர்கள் முழுமையாக வழிநடத்தினார்கள்.

நிகழ்ச்சி அகமத் கபீர் ஹஜ்ரத் அவர்களின் திருக்குர்ஆன் கிராஅத்துடன் தொடங்கியது.

நிகழ்ச்சியில் கும்பகோணம் வட்டார ஐக்கிய ஜமாஅத் தலைவர் M.Y சம்சுதீன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.
மேலும், நிகழ்ச்சியை சிறப்பாக ஒருங்கிணைத்து நடத்துவதில் ஐக்கிய ஜமாஅத் செயலாளர் ஜனாப் ஜே. ஜாகிர் ஹுசைன் அவர்கள் முக்கிய பங்காற்றினார்.

அதேபோன்று, ஐக்கிய ஜமாஅத் பொறுப்பாளர்களான ஜனாப் அய்யூப் கான், எம்.எல்.ஏ. அப்துல் மாலிக், எம். முஹம்மது அபூபக்கர் மற்றும் ஜே. ஹாஜி முஹம்மது ஜெய்லானி ஆகியோர் நிகழ்ச்சிக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கி சிறப்பித்தனர்.

நிகழ்ச்சியின் சிறப்புரையை எம். முஹம்மது இஸ்மாயில் இம்தாதி JIH மனிதவள மேம்பாட்டுதுறை அவர்கள் வழங்கினார்.

 தனது உரையில், மதுவும் போதைப்பொருட்களும் தனிமனித வாழ்க்கை, குடும்பம் மற்றும் சமூகத்தில் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்தும், போதையற்ற சமூகத்தை உருவாக்குவதற்கான நமது பொறுப்பு குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.
நிகழ்ச்சியை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் – மாவட்ட பொறுப்பாளர் முஹம்மது யூனுஸ் அவர்கள் துவக்க உரை நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில் கும்பகோணம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பல்வேறு பள்ளிவாசல் நிர்வாகிகள், ஜமாஅத் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக, பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக நண்பர்களும் கலந்து கொண்டு, மதுவும் போதைப்பொருட்களும் இல்லாத ஒரு நல்ல சமூகத்தை உருவாக்குவதற்கான இந்த விழிப்புணர்வு முயற்சிக்கு தங்களுடைய ஆதரவை தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து ஜமாஅத் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள், மதுவுக்கும் போதைப்பொருட்களுக்கும் எதிரான விழிப்புணர்வுப் பணிகளை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்ற உறுதியுடன் நிகழ்ச்சியை வரவேற்று மகிழ்ந்தனர்.

மதுவும் போதையும் இல்லாத ஆரோக்கியமான, பாதுகாப்பான சமூகத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம் என்ற நோக்கத்துடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.