News Channel

பத்திரிக்கை அறிக்கை

மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக டெல்லி ஜந்தர் மந்தரில் தன்னலமின்றி தன்னார்வத் தொண்டாற்றியதற்காக காவல்துறையின் அச்சுறுத்தலுக்கும் துன்புறுத்தலுக்கும் ஆளான சகோதரர் ஜுனைத், இன்று ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அகில இந்திய தலைமையகம் வருகை தந்தார்.

அவரது இந்த வருகையின்போது, ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் துணைத் தலைவர் மலிக் முஹ்தசிம், குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பான APCR-இன் தேசியச் செயலாளர் நதீம் கான் மற்றும் ஜமாஅத்தின் பிற பொறுப்பாளர்களைச் சந்தித்து கலந்துரையாடினார்.

அப்போது, 
தாம் எதிர்கொண்ட துயரமான அனுபவங்களை சகோதரர் ஜுனைத் பகிர்ந்து கொண்டார். 
எந்தச் சட்டபூர்வமான காரணமும் இன்றி காவல்துறையினர் தம்மைக் கைது செய்து உத்தரகண்ட் மாநிலத்திற்கு அழைத்துச் சென்றதாகவும், மேலும் தேசிய புலனாய்வு முகமை (NIA) வழக்கில் சிக்க வைக்கப்படும் என மிரட்டி அச்சுறுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.

சகோதரர் ஜுனைத்தின் துணிச்சலையும், தன்னலமற்ற சேவையையும், மாணவர் இயக்கத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பையும் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் துணைத் தலைவர் மலிக் முஹ்தசிம் கான் மனமாரப் பாராட்டினார். 

மேலும், 
அவர் எதிர்கொண்டுள்ள அச்சுறுத்தல்கள் மற்றும் துன்புறுத்தல்களை எதிர்கொள்வதில், 
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் முழுமையான சட்டரீதியான மற்றும் தார்மீக ஆதரவை வழங்கும் என உறுதியளித்தார்.

இதற்கு முன்னதாக, குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் சங்கமான (Association for Protection of Civil Rights - APCR) அமைப்பின் பிரதிநிதிகள் குழு, 
சகோதரர் ஜுனைத்தின் கிராமத்திற்குச் சென்று அங்குள்ள காவல் நிலைய அதிகாரி (SHO) மற்றும் பிற அதிகாரிகளைச் சந்தித்தது. 

சகோதரர் ஜுனைத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் துன்புறுத்தல்கள், அச்சுறுத்தல்கள் மற்றும் நிர்பந்த நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அந்தக் குழு வலியுறுத்தியது.