மாநில தலைவருடன் மங்கலம் அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு நிர்வாகிகள் சந்திப்பு...
ஆகஸ்ட் 21, திங்கள் கிழமை பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழ்நாடு மாநில தலைவர் மவ்லவி ஹனீபா மன்பஈ அவர்கள் மங்கலம் பகுதிக்கு வருகை தந்தார்கள்.
தலைவர் அவர்களை
மங்கலம் அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு (MAIJO) நிர்வாகிகள் சந்தித்தனர், அவர்களுடன் கலந்துரையாடல் நடை பெற்றது. அதில் தலைவர் அவர்கள், ஒத்த கருத்துடைய விஷயங்களில் நாம் அனைவரும் ஒன்று இணைந்து செயல்பட வேண்டியதின் அவசியத்தை எடுத்துரைத்து, ஜமாஅத் செய்து வரும் பணிகள் குறித்து விளக்கம் அளித்து இவற்றிற்கு அவர்களது ஆதரவு வழங்குமாறும் கேட்டுக் கொண்டார்.
அதே போல் நாம் எதில் கவனம் செலுத்த வேண்டும் இலக்கை நிர்ணயித்து நமது பணிகள் அமைய வேண்டும் கல்வி, மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் நாம் கவனம் செலுத்தி அடுத்த தலைமுறையை இலக்காக வைத்து செயல்படுவதின் அவசியத்தை எடுத்துரைத்தார். கலந்து கொண்ட நிர்வாகிகள் அனைவருக்கும்
' போதை இல்லா தமிழகம் ' பரப்புரை சமரசம் சிறப்பிதழ் அன்பளிப்பாக வழங்கப் பட்டது. இந்த சந்திப்பில் ஜமாஅத்தின் மேற்கு மண்டல அமைப்பாளர் ஜனாப் S.A.K.ஜெய்லானி அவர்களும் மங்கலம் கிளைத் தலைவர் ஜனாப்: அப்துல் வதூத் அவர்களும் கிளைச் செயலாளர் ஜனாப்: அப்துல் ரசீத் அவர்களும் வெல்ஃபேர் கட்சியின் திருப்பூர் மாவட்ட தலைவர் ஜனாப்: முஹம்மது ரிஸ்வான் அவர்களும் கலந்து கொண்டனர்..