News Channel

KISWA HOSTEL - போதையில்லா தமிழ்நாடு

கும்பகோணம்: போதையில்லா தமிழ்நாடு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, கும்பகோணம் KISWA Hostel மாணவர்களிடையே போதை மற்றும் மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், சாலிடாரிட்டி அமைப்பின் மாநிலச் செயலாளர் மௌலவி பி. முஹம்மது நாசர் புகாரி அவர்கள் சிறப்புரையாற்றி, போதை மற்றும் மதுப் பழக்கத்தினால் ஏற்படும் சமூக மற்றும் தனிநபர் பாதிப்புகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

நிகழ்வில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் – கும்பகோணம் கிளைத் தலைவர் அப்துல் கலாம் ஆசாத், KISWA தலைவர் கமால் பாட்ஷா, போதையில்லா தமிழ்நாடு பிரச்சாரத்தின் கும்பகோணம் கன்வீனர் முஹம்மது ரியாஸ், டிரஸ்ட் உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட 60-க்கும் மேற்பட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பயனடைந்தனர். நிகழ்ச்சியின் நிறைவில், போதை மற்றும் மதுவுக்கு எதிராக அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் – கும்பகோணம்
போதையில்லா தமிழ்நாடு பிரச்சாரம்