News Channel

"பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி"

"பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி"

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழ்நாடு & புதுச்சேரி 
மாநில தலைமையகத்தில் மாதாந்திர பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி 20.08.2026 இன்று காலை 11 மணிக்கு நடைபெற்றது.

இந்நிகழ்வில், நாட்டில் தற்போது முக்கியத்துவம் பெற்றுள்ள பல்வேறு சமூக மற்றும் தேசியப் பிரச்சினைகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

குறிப்பாக,

- மது மற்றும் போதைக்கு எதிரான மாநிலம் தழுவிய பரப்புரை

- கல்வி – கவலையளிக்கும் கள நிலவரம்

- போதை – நாளுக்கு நாள் அதிகரித்து வரும் குற்றங்கள்

- வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்தச் சட்ட மசோதா, 2026 (FCRA)

- தேசிய கௌரவ அவமதிப்பு தடுப்பு (திருத்த) மசோதா, 2026

ஆகிய முக்கியத் தலைப்புகள் குறித்து 
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழ்நாடு & புதுச்சேரி மாநிலத் தலைவர் மௌலவி A. முஹம்மது ஹனீஃபா மன்பயீ அவர்கள் பத்திரிகையாளர்களிடம் விரிவாக உரையாற்றினார்.
பின்னர் அவர்களின் கேள்விகளுக்கும் விரிவாக பதிலளித்தார்.

இந்நிகழ்வில் பங்கேற்ற பத்திரிகையாளர்கள், தொலைக்காட்சி நிருபர்கள் மற்றும் யூடியூபர்கள் பல்வேறு முக்கியமான பல கேள்விகளை முன்வைத்தனர்.

குறிப்பாக,

- காவல் நிலையங்களில் நடைபெறும் படுகொலைகள் குறித்து ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் கருத்து என்ன?

- தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதற்கும், அவர்கள் எல்லை தாண்டியதாகக் கூறப்படுவதற்கும் முற்றுப்புள்ளி வைக்க என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்?

- தவெக ஆட்சியில் மது மற்றும் போதை கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறதே 
அது உண்மையா?

- ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பில் மது மற்றும் போதைக்கு எதிரான பிரச்சாரப் பணிகள் தற்போது எவ்வாறு நடைபெற்று வருகின்றன? எதிர்காலத்தில் என்னென்ன திட்டங்கள் உள்ளன?

- FCRA திருத்தச் சட்டத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் என்ன?

- தேசிய கௌரவ அவமதிப்பு தடுப்பு (திருத்த) மசோதா, 2026 என்ன கூறுகிறது?

- கடந்த ஆட்சியிலும் மதுவிற்பனை இருந்தது
தற்போதைய ஆட்சியிலும் தொடர்கிறது. 
மதுவுக்கு ஆதரவான கொள்கையைக் கொண்ட கட்சிகளுடன் முஸ்லிம் அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பது குறித்து ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் நிலைப்பாடு என்ன?

-  காவல்துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு போதிய அளவில் ஆட்கள் தேர்வு செய்யப்படாததால் காவலர்கள் கடுமையான மன அழுத்தத்திற்கு உள்ளாவதாக ஒரு காவலரே பேட்டி அளித்துள்ளார். 
இதுகுறித்து தங்களது கருத்து என்ன?

என பல்வேறு முக்கியமான கேள்விகளை பத்திரிகையாளர்கள் முன்வைத்தனர். 
அவற்றிற்கு மாநிலத் தலைவர் மௌலவி A. முஹம்மது ஹனீஃபா மன்பயீ அவர்கள் விரிவான விளக்கங்களுடன் பதிலளித்தார்.

இந்நிகழ்வில் மாநிலத் துணைத் தலைவர்கள் 
ஜனாப் T. யூசுப் பாஷா, ஜனாப் K. M. சிராஜ் அஹ்மத், 
மாநில ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் 
T. அஜீஸ் லுத்புல்லாஹ், V. S. முஹம்மது அமீன், S. N. சிக்கந்தர், 
மாநில அமைப்புச் செயலாளர்
K. ஜலாலுதீன் 
மாநில மகளிர் அணி செயலாளர் 
சகோதரி பாத்திமா ஜலால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும், 30-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள், தொலைக்காட்சி நிருபர்கள் மற்றும் யூடியூப் ஊடகவியலாளர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

அனைவருக்கும் பத்திரிக்கை அறிக்கை,
மது போதைக்கு எதிரான "சமரசம்" சிறப்பிதழ்,
IFT வெளியீடான "போதை அழிவின் பாதை" என்ற புத்தகம் வழங்கப்பட்டது.

பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சியை 
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழ்நாடு & புதுச்சேரி 
மாநில ஊடகச் செயலாளர் S. சாகுல் ஹமீது அவர்கள் தொடங்கி வைத்து, நிகழ்வை ஒருங்கிணைத்து வழிநடத்தினார்