போதையில்லா தமிழ்நாடு பரப்புரை இயக்கம் – திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினருடன் சந்திப்பு
போதையில்லா தமிழ்நாடு பரப்புரை இயக்கத்தின் ஒரு பகுதியாக, இன்று 22.08.2026 காலை, திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு கே. சுப்பராயன் அவர்களை சந்தித்து, பரப்புரையின் நோக்கம், செயல்பாடுகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து அறிமுகப்படுத்தி கலந்துரையாடல் நடைபெற்றது.
சந்திப்பின்போது, நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள், “நானும் போதைப் பொருட்களை முழுமையாக எதிர்க்கக்கூடியவன் தான். அருமையான பணியை நீங்கள் முன்னெடுத்து வருகிறீர்கள். இது மனதை நெகிழச் செய்கிறது. சிறப்பாகச் செய்யுங்கள். வாழ்த்துக்கள்” என்று தனது ஆதரவைத் தெரிவித்தார்.
மேலும், தன்னுடைய செல்போனை வழங்கி QR Code-ஐ ஸ்கேன் செய்து, போதைப் பொருட்களுக்கு எதிரான தனது ஆதரவை மேலும் உறுதி செய்வதாகவும் தெரிவித்தார்.
சந்திப்பின் போது “போதை அழிவின் பாதை” என்ற விழிப்புணர்வு புத்தகமும், “சமரசம்” இதழும் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களுக்கு வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் மாநிலச் செயலாளர் A. முகமது காசிம், மாநகரச் செயலாளர் முஜிபுர் ரஹ்மான், மகளிர் அணி பொறுப்பாளர்கள் நாஜிமா, அம்சா பேகம், துணை பொறுப்பாளர் தமீம் பானு மற்றும் ஊழியர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
இந்தச் சந்திப்பு பயனுள்ளதாகவும், நினைவுகூரத்தக்கதாகவும் சிறப்பாக அமைந்தது.