News Channel

உடுமலை பள்ளியில் மது போதைக்கு எதிரான பரப்புரை நிகழ்ச்சி

உடுமலையில் சுதந்திர தின நிகழ்வில்
மது, போதைக்கு எதிரான பரப்புரை

15.08.2026 அன்று உடுமலை கிளை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிரணி சார்பாக உடுமலை SSA  நகராட்சி பள்ளியில் சுதந்திர தின விழா நடைப்பெற்றது.

நிகழ்வில் தலைமை ஆசிரியை ஜெயலட்சுமி அவர்கள் கொடி ஏற்றி சிறப்புரை ஆற்றினார்.

மகளிரணி தலைவி A. மெஹராஜ் போதையில்லா தமிழகம் உருவாக்குங்கள் என்ற தலைப்பில் போதை பொருள் பயன்பாடு மனித அறிவை மழுங்கடிக்கச் செய்வதுடன் உங்களை நீங்களே இழந்து சமுதாயத்தையும் அழித்துக் கொண்டிருக்கிறது. ஆதலால் போதைக்கு நான் அடிமையாக மாட்டேன் என்று மாணவர்களுக்கு உறுதிமொழி சொல்லிக்கொடுக்கப்பட்டு சிறப்பு உரை அமைந்தது.

ஊழியர் வட்டப் பொறுப்பாளர் ஆயிஷா  சுதந்திர தின வாழ்த்துக் கூறி சுதந்திர தின கவிதை வாசித்தார்கள்.

ஊழியர்கள் சுதந்திர தின வாழ்த்துக்கள்  கூறினார்கள்.

தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியைகள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்று உரையை கேட்டு மாணவர்களிடம் இது போன்ற உரையை நீங்கள் கேட்டு பின்பற்றுங்கள் என்று வலியுறுத்தினர்

60க்கும் மேற்றப்பட்ட மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இறுதியில் இனிப்புகள் வழங்கப்பட்டது.